பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

Jan 10, 2025,05:31 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு மொத்தம் 21 ஆயிரத்து 904 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக  சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும்  மூன்று நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படும். ஆனால் இந்த வருடம் தொடர்ந்து ஆறு நாட்கள் பொதுவிடுமுறை விடப்படுகிறது. இந்தத் தொடர் விடுமுறை காரணத்தால் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இதனால் பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிப்பதற்காக தினசரி இயக்கம் பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.




அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து மொத்தம் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 


குறிப்பாக சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில்  இருந்து பிற ஊர்களுக்கு 3,537 பேருந்துகளும், பிற முக்கிய நகரகங்களில் இருந்து 1,560 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  அதன்படி, மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன . கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.


அதேபோல் வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மப்சல் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளன. மேலும் பயணிகள் இப்பேருந்து நிலையங்களுக்குச் செல்ல மாநகர சிறப்பு இணைப்பு பேருந்துகளும் இயக்க  ஏற்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்த கழகம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவலை அறியவும், பேருந்துகள் இயக்கம் குறித்து புகார் அளிக்க 94450-14436 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற இலவச எண்ணிலும்,  044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க.. புதிய மசோதா.. சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல்

news

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் உள்ள பாசிச சக்திகள்.. அடையாளம் காண்போம்.. திருமாவளவன்

news

வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

news

பெரியார் சொல்லாதவற்றை சொன்னார் என பொய் பரப்பும் தற்குறிகள்.. துரைமுருகன் ஆவேசம்!

news

பொங்கலுக்கு ஊருக்குப் போலாமா.. இன்று முதல் 13ம் தேதி வரை .. 21,904 சிறப்புப் பேருந்துகள்!

news

பெரியார் குறித்த பேச்சு.. நாம் தமிழர் சீமான் மீது குவியும் புகார்கள்.. இதுவரை 11 மாவட்டங்களில் FIR

news

Vaikunta Ekadasi 2025.. "கோவிந்தா...கோவிந்தா" கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

news

மார்கழி 27 திருப்பள்ளியெழுச்சி பாடல் 7 : அது பழச்சுவையென அமுதென

அதிகம் பார்க்கும் செய்திகள்