சென்னை: தமிழ்நாட்டின் கிராமப் புறப் பகுதிகளில் உள்ள குறைகளை போக்கும் விதமாக ஊராட்சி மணி என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி இலவச தொலைபேசி எண் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போன் செய்து நமது ஊர்ப் பிரச்சினைகளைச் சொன்னால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதை சரி செய்ய முயற்சிப்பார்கள். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் இது செயல்படுத்தப்பட்டவுள்ளது.
இச்சேவையை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செப்டம்பர் 27ம் தேதி இணைய வழியாக தொடங்கி வைத்துள்ளார். பொது மக்கள் 155340 என்ற எண்ணை அழைத்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த மையம் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தற்பொழுது 10 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கிராமத்தினை சேர்ந்தவர்களும் மிக எளிமையான முறையில் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு.
155340 என்ற தொலைப்பேசி வாயிலாகவும், Ooratchimani.in என்ற வலைத்தளம் மூலமும் எளிதாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி, இணைய வயிலாக பெறப்படும் புகார்களின் தன்மையை பொருத்து விரைந்து தீர்வு காணப்படும். ஓவ்வொரு புகார்களும் குறிப்பிட்ட காலவரையரைக்குள் தீர்வு வழங்கப்படும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் போன்றவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகலாம். இவர்களுக்கும் விரைந்து பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
"இங்க அடிச்சா அங்க கேட்கும்".. என்ற கேப்ஷனுடன் இதுகுறித்த விளம்பரத்தை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அடிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் இதை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!
Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
{{comments.comment}}