தம்பி விஜய் இப்பத்தானே கோடு போட ஆரம்பிச்சிருக்காரு.. எதிர்காலம் சொல்லட்டும்.. செல்லூர் ராஜு ஆரூடம்!

Feb 04, 2024,06:58 AM IST

மதுரை: தம்பி விஜய் இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. ஒரு கோடு போட்டிருக்காரு. விஜய்யின் கட்சி குறித்து எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சரான அதிமுகவைச் சேர்ந்த செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


நடிகர் விஜய்யின் புதிய கட்சி குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். பலர் வாழ்த்தியுள்ளனர். ஒரிருவர் தவிர, பெரிதாக யாரும் விமர்சிக்கவில்லை.  இவரின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துகள் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சிலர் கட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்களையும், சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றனர்.


இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், அது எல்லாம் மக்கள் கையில இருக்கு தலைவா. இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்காரு. ஒரு கோடு போட்டிருக்காரு. தம்பி விஜய் ஒரு தமிழர், நல்ல மனம் படைத்தவர். அவர் கட்சி குறித்து எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.




மதுரையில் கட்சி ஆரம்பிச்சவருதான்  கமல்ஹாசன். ஊழலை ஒழிப்பேன் என்று கமலஹாசனும் சொன்னாரு.  நீதி கிடைத்து மக்கள் சுபிட்சமாக வாழனும்னு சொன்னாரு. என்னாச்சு. சொல்லுங்கப்பா. இப்படி இருக்கும் போது, தம்பி இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்கார். தம்பி ஒரு தமிழர், இளைஞர் அதற்கு மாற்று கருத்து கிடையாது. அவரு கொள்கை இனி மேல் வரணும். இன்னும் நிறைய  இருக்கு. 


மக்கள் எல்லாரும் புரட்சித் தலைவரை விரும்பினாங்க. அவர் வர்றாருனா  18, 20 மணி நேரம் காத்து கிடந்தாங்க. எங்கம்மா வந்தாங்கனா மக்கள் காத்து கிடந்தாங்க. அந்த வரலாறு இப்ப இல்ல. அண்ணா திமுக வேறு, மாற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பது வேறு. தம்பி இப்ப கட்சி ஆரம்பிச்சுருக்கிறாரு. எப்படி கொண்டு போவாருனு தெரியாது. மக்கள் தான் நீதிமான்கள், மக்கள் தான் அதை சொல்லணும் என்றார்.


பாஜக நெருக்கடியால் விஜய் கட்சி - கோவை சத்யன்


இதற்கிடையே, விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு  பாஜகதான் காரணம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் வளர்ந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் பாஜக உள்ளது என வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிகாந்தை கட்சி தொடங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால், தப்பித்து விட்டார். 


அடுத்த தூண்டில்  விஜய் தான். தமிழ்நாட்டில் வளர்ச்சியை பெற திரைத்துறையில் இருந்து ஒரு முகம் தேவை என பாஜக நினைக்கிறது. அந்த தேவையை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்