எம்டிசி, ரயில், சென்னை மெட்ரோ.. ஒரே டிக்கெட்டில் மூன்றிலும் பயணிக்கலாம்.. அடுத்த வருடம் முதல்!

Jul 09, 2024,09:20 PM IST

சென்னை:   சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில்  சிட்டி பஸ், மெட்ரோ, புறநகர் ரயில் என  மூன்று வகையான வாகனங்களில் பயணம் செய்யும் திட்டம், அடுத்த ஆண்டு ( 2025) மார்ச் மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மட்டுமே வரும் டிசம்பரில் இந்த ஒரே டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


சென்னையில் கிட்டத்தட்ட 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். புறநகர்களில் உள்ளோரையும் சேர்த்தால் இது 1 கோடியைத் தாண்டும். பணி நிமித்தமாக வெளியூரிலிருந்து வருபவர்களும் சென்னையில் அதிகம் உள்ளனர். மேலும் ஃபுளோட்டிங் பாப்புலேஷனும் சென்னையில் அதிகம். அதாவது காலையில் வந்து விட்டு மாலையில் அவரவர் ஊர் திரும்புவோர். இதை ஃபுளோட்டிங் பாப்புலேஷன் என்பார்கள். இவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மூன்று வகையான போக்குவரத்து முறையை முக்கியமாக கையாளுகிறார்கள். புறநகர் ரயில்கள், சிட்டி பஸ் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவையே அவை.




இந்த வசதிகள் மூன்றையும் மக்கள் பயன்படுத்த தனித்தனியாக பயண டிக்கெட்டுகள் எடுத்து வருகின்றனர். அதாவது பஸ்ஸுக்கு தனி டிக்கெட், ரயிலுக்கு தனி, மெட்ரோவுக்கு தனி. ஒவ்வொன்றையும் டிக்கெட் எடுக்க அதற்கு தனியாக மெனக்கெட வேண்டியுள்ளது. இந்த அசவகரியத்தைத் தவிர்த்து 3க்கும் ஒரே டிக்கெட்டைப் பயன்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி இந்த அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே டிக்கெட் தான். தனித்தனியாக டிக்கெட் எடுக்க தேவையில்லை. ஒரே இடத்தில் டிக்கெட் வாங்கினால் போதும், இதை வைத்துக் கொண்டு பேருந்து, மெட்ரோ, மற்றும் புறநகர் ரயில் என மூன்று வகையான போக்குவரத்துகளிலும் பயணங்களை மேற்கொள்ளலாம்.


சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பொது போக்குவரத்து பயணங்களை மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. இருப்பினும் முதல் கட்டமாக, இந்தத் திட்டம்  வரும்  டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான செயலியை உருவாக்கும் பணியை தற்போது மூவிங் டெக் இன்னோவேஷன்ஸ் ( moving tech innovations private limited ) என்ற நிறுவனத்திற்கு ஆணை வழங்கியுள்ளது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்.


இந்த மூன்று வகையான போக்குவரத்துகளில் பயணம் செய்ய ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். அதன் மூலம் மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்க முடியும்.  அந்த கார்டை கொண்டு நடத்துனரிடம் கொடுக்கப்பட்டுள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன்  செய்து பேருந்தில் பயணிக்கலாம். இதே போல மின்சார ரயில்களில் சோதனை செய்யும் நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்து மின்சார ரயிலிலும் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

இரத்தக்களறி (சிறுகதை)

news

4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்