One Nation, One Election: ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று முதல் ஆலோசனை கூட்டம்

Sep 23, 2023,09:19 AM IST

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியின் முதல் கூட்டம், அக்கமிட்டியின் தலைவரான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது.


மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி பரிந்துரைக்கும் யோசனைகளை அமபல்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.




இந்தக் கமிட்டியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எட்டு பேர் அறிவிக்கப்பட்டனர். இக்கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.


இன்றைய கூட்டத்தில் ஒரே நேரத்தில் லோக்சபா  மற்றும் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயப்படும். இந்திய அரசியலமைப்பு சாசனச் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் தேவை என்பது குறித்தும் ஆராயப்படும்.


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில், அதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் இந்த திட்டம்தொடர்பாக ராம்நாத் கோவிந்த் கமிட்டி என்ன பரிந்துரையை அளிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதேசமயம், ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்