டில்லி : நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்தி முடிக்க வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதை ஒத்திவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் டிசம்பர் 04ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 20ம் தேதியுடன் இந்த கூட்டத் தொடர் முடிவடைய உள்ளது. அதனால் நடப்பு கூட்டத் தொடரிலேயே பல முக்கிய சட்ட திருத்த மசோதாக்கலை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பார்லிமென்ட்டின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இந்த பரபரப்பிற்கு இடையே டிசம்பர் 16ம் தேதியான நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
சட்டப்பிரிவு 129 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான இரண்டு சட்ட மசோதாக்களை டிசம்பர் 16ம் தேதி பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. டிசம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்ட பார்லிமென்ட் சட்ட மசோதா தாக்கல் குறித்த பட்டியலில் இவை இரண்டும் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், தற்போது இவை நாளை தாக்கலாக உள்ள மசோதாக்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் சட்ட மசோதா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என மத்திய அரசு வட்டாரத்தில் விசாரித்த போது, இப்போது வரை இந்த மசோத தெளிவாக இல்லாததால் இதை இப்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வார இறுதியில் இந்த இரண்டு மசோதாக்களும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள் முடிவடைந்த பிறகு பிறகு புதிய மசோதா தாக்கல் குறித்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து தான் மத்திய அரசு, நாளை தாக்கல் செய்ய இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தள்ளி வைப்பதாக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு தான் மத்திய அரசின் இந்த முடிவிற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா தேர்தல் நடத்தப்படும் போது அதோடு சேர்த்தே அனைத்து மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல்களையும் நடத்தி முடிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவதே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஆகும். இதனால் தேர்தல் கமிஷனுக்கு செலவுகள் குறையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
{{comments.comment}}