சென்னையில் மீண்டும் ஒரு நாய்க்கடி.. 11 வயது சிறுவன் காயம்.. வேளச்சேரியில் பரபரப்பு

May 08, 2024,03:13 PM IST

சென்னை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாய் கடித்து சிறுமி காயமடைந்த நிலையில், தற்போது மீண்டும் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவனை நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 


சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் அஸ்வந்த் என்ற 11 வயது சிறுவன். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையைக் களிப்பதற்காக சிறுவன் அஸ்வந்த் ஆலத்தூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு வந்துள்ளார்.


நேற்று மாலை அஸ்வந்த் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதே பகுதியில் ஒரு வீட்டில்  சைப்ரீயன் ஹஸ்கி வகை நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். திடீரென அந்த நாய் சிறுவனை கடித்தது. இதில் சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினான். இதனை அறிந்து உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் அஸ்வந்த் பெற்றோர் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 




புகாரின் அடிப்படையில் நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ராட்வெய்லர் வகை நாய் ஒன்று கடித்து  குதறியது. அதேபோல் மீண்டும் சிறுவனை நாய் கடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்