ஆம்னி பஸ் ஸ்டிரைக் வாபஸ்.. அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகம் என்று தகவல்!

Oct 24, 2023,03:30 PM IST

சென்னை: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளிமாநிலத்திற்கும், தொலைதூரம் செல்ல வேண்டிய இடங்களுக்கும் மக்கள் தங்களின் வசதிக்காக ஆம்னி பஸ்சையே தேர்வு செய்கின்றனர்.


தொடர் அரசு விடுமுறை முடிந்து இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சொந்த ஊர் திரும்ப இலட்சக்கான மக்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் ஆம்னி  பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை பறிமுதல் செய்தது.




இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஸ்டிரைக் செய்யப் போவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்தன. இதனால் பயணிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்ல ஏறக்குறைய ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் இன்று மாலை ஆறு மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என அறிவித்தது மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. 


இதனால் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல உள்ள பயணிகள் என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்தது.  இந்த நிலையில் தற்போது அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் ஓடும் என்றும் தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால் குழப்பம் தீர்ந்துள்ளது

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்