ஜம்மு காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா.. இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து!

Oct 16, 2024,03:37 PM IST

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வென்று,  அம்மாநிலத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஒரு சுயேட்சை உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேந்தர் செளத்ரி என்பவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளில் இருந்தவர் ஆவார்.




முதலில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்த சுரேந்தர் செளத்ரி பின்னர் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த ஜூலை மாதம்தான் இவர் அங்கிருந்து விலகி தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வந்தார். தற்போது துணை முதல்வராகியுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இழுத்தடித்து வந்தது அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகமாக அமைந்து விட்டது. அதே சமயம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தரும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வாக்குறுதி அளித்து, அதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தை முன் வைத்தது அவர்களின் வெற்றிக்கு சாதமாக அமைந்து விட்டது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லா, அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!


ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. பரூக் அப்துல்லா அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை  கனிமொழியை என் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.


இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம் என்றார் அவர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்

news

உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்

news

சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!

news

சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!

news

புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்

news

Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!

news

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!

news

கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்