டெல்லி: 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பாரிஸில் நடந்த ஒலிம்பிக் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமன் 61.5 கிலோ எடை இருந்துள்ளார் இது இவர் இருக்க வேண்டிய எடையை விட கிட்டதட்ட 4.6 கிலோ எடை அதிகமாகும். இந்த அதிகப்படியான எடையை 10 மணி நேரம் உடற்பயிற்சி செய்து குறைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர் இந்த அமன்.
அவர் பட்ட கஷ்டத்தின் பலனாக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக அமனுக்கு இந்திய ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷூ உபாத்யாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்றார்.
அதேபோல பதக்கம் வென்ற இன்னொரு வீரரான ஸ்வப்னில் குசேலுக்கும் ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரராவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}