7 மாத கருவை சுமந்து கொண்டு.. வாள் வீச்சில் கலக்கிய வீராங்கனை.. வியப்பில் ஆழ்ந்த பாரீஸ்!

Jul 31, 2024,07:55 PM IST

பாரீஸ்:   எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை நடா ஹபீஸ் தனது வயிற்றில் 7 மாத கருவை சுமந்து கொண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.


எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நடா ஹபீஸ். இவர் சிறந்த வாள் வீச்சு வீராங்கனை. 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா மண்டல சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளியும், 2014 மற்றும் 2019களில் இரண்டு வெண்கலத்தையும் வென்றவர். தற்போது பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நடா ஹபீஸ் வாள்வீச்சில் பங்கேற்றார். இதில் தன்னுடைய முதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எலிசபெத்தை எதிர்த்து  15 க்கு 13 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து  நடைபெற்ற அடுத்த சுற்று போட்டியில் தென்கொரியா வீராங்கனையான ஜியோன் ஹயோங்கியை எதிர்த்து போட்டியிட்டு 15 க்கு 7 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். 




இந்த நிலையில் நடா ஹபீஸ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அச்செய்தியை உலகமே திரும்பிப் பார்த்து பலரின் கவனத்தையும் ஈர்க்கப் பெற்றுள்ளது. அதனை  அனைவரும் பாராட்டி  வருகின்றனர். நடா ஹபீஸ் கூறுகையில், களத்தில் இருந்தது இரண்டு பேர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் இருந்தது மூன்று பேர். ஒன்று நான், ஒன்று என் எதிரணி வீராங்கனை. மற்றொன்று இந்த உலகத்தை இன்னும் காணாத என் குட்டிக் குழந்தை. நானும் என் குழந்தையும் பல சவால்களை சந்தித்து இந்த போட்டியில் பங்கேற்று இருக்கிறோம்.


உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்கள் நிறைந்த இந்தப்  போட்டியை நான் சந்தித்தேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இச்செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரவி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


பெண்கள் இயல்பிலேயே சக்தி வாய்ந்தவர்கள், எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். துணிந்தால் எதுவும் காலடியில் என்பதைத்தான் நடா ஹபீஸ் நிரூபித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்