சென்னை: ஓலா, உபேர் தனியார் வாகன ஓட்டுநர்கள் சென்னையில் இன்றும் நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில், விதிமீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்றுதல், இருசக்கர வாகன டாக்சிகளை தடை செய்தல், வாடகை வாகன செயலிகளை முறைப்படுத்துதல், அரசே தனியாக வாகன செயலிகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி உபேர், ஓலா வாகன டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப்போராட்டம் இன்று, நாளையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அக்டோபர் 18ம் தேதி அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு பெரும்பாலான வாடகை வாகன ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இது குறித்து தனியார் வாகன ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர் ஜாஹீர் உசைன் கூறுகையில், ஓலா, உபேர் செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும்.
வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அமைச்சரின் சட்டசபை அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இதை உடனடியாக செய்ய வேண்டும் என்றார் அவர்.
ஆட்டோக்களுக்கு கிராக்கி
உபேர், ஓலா டிரைவர்கள் ஸ்டிரைக்கால் மக்கள் தற்போது ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்பெல்லாம் ஆப்பில் புக் செய்து விட்டால் நாம் நிற்கும் இடத்துக்கே டாக்சி, உபேர் ஓலா ஆட்டோ வந்து விடும். ஆனால் ஸ்டிரைக் காரணமாக சாதாரண ஆட்டோக்களை நாட வேண்டியுள்ளது. ஆனால் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி ஆட்டோக்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
பைக் டாக்சிகளுக்கு முறையான அனுமதி இல்லாவிட்டாலும் கூட அந்த சேவை தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் சாதாரண ஆட்டோக்கள் மட்டுமல்லாமல், உபேர், ஓலா டிரைவர்களும் கூட பாதிக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால் சாமானிய மக்கள் குறைந்த செலவில் தங்களது இடத்திற்குச் செல்ல பைக் டாக்சி வெகுவாக கை கொடுப்பதாக கூறுகிறார்கள்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}