தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 26 ம் தேதி புதன்கிழமை
ஏகாதசி, இன்று அதிகாலை 01.13 வரை தசமி, அதற்கு பிறகு இரவு 10.54 வரை ஏகாதசியும், பிறகு துவாதசியும் உள்ளது. காலை 09.57 வரை ரேவதி, பிறகு அஸ்வினி. காலை 06.18 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம்: காலை - 10.45 முதல் 11.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 11.15 முதல் 12 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எதிலும் அமைதியாக இருக்க வேண்டும். வேலை பளு அதிகரிக்கும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் பேசும் போது வார்த்தைகளில் அக்கறை காட்ட வேண்டும். பண இழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ரிஷபம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். பணிகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். எதிலும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சொத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம் - வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்ற நாளாக இருக்கும்.
கடகம் - பதற்றமாக இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணத்தில் நெருக்கடியான நிலை ஏற்படும். தாயின் உடல் நலத்தில் அக்கறை அவசியம்.
சிம்மம் - எதிலும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். வேலையில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடன் இருப்பவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். பண விஷயத்தில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
கன்னி - அனுகூலமான நாளாக இருக்கும்.வெற்றிக்கான வாய்ப்புகள் தேடி வரும். கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கை துணையுடன் புரிதல் அதிகரிக்கும். பணபுழக்கம் தேவைக்கு ஏற்ப இருக்கும். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் - சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பண வரவால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும், ஒற்றுமையும் இருக்கும்.
விருச்சிகம் - முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்குள். பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் சிரமப்படுவீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கால்களில் வலி ஏற்பட்டு விலகும்.
தனுசு - எதிலும் அலட்சியம் இன்றி நடந்து கொள்ளுங்கள். வேலை சுமை அதிகரிக்கும். பணி மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.
மகரம் - திறமைகள் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாளாக இருக்கும். எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கும்பம் - வளர்ச்சி சார்ந்த பணிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். வாய்ப்புகள் கை நழுவி போக வாய்ப்புள்ளது. பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
மீனம் - தடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுப்புகளுடன் செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}