ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்.. ஜெயலலிதா பிறந்தநாளில் சோகம்!

Feb 25, 2023,09:18 AM IST

பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தனது தாயார் மறைந்ததால் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் பெரும் துயரமடைந்துள்ளனர்.


95 வயதான பழனியம்மாள் நாச்சியாருக்கு சமீப காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த 22ம் தேதி அவருக்கு உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால்,  அவரை தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. எந்த பலனும் இல்லாமல் இருந்தது. இதனால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.


மதுரை போகும் சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி.. இனி தேஜாஸ் தாம்பரத்திலும் நின்று செல்லும்!


நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்து தனது தாயாரின் உடல் நலம் குறித்துக் கேட்டறிந்தார் ஓ.பி.எஸ். அதன் பின்னர் நேற்று ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் சென்னைக்கு வந்திருந்தார். பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு, கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு காரசாரமான பேட்டியும் அளித்திருந்தார். இந்த நிலையில் இரவில் பழனியம்மாள் நாச்சியாரின் உடல் நலம் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.


வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே பழனியம்மாள் உயிர் பிரிந்தது.  இன்று பழனியம்மாளின் இறுதிச் சடங்குகள் பெரியகுளத்தில் நடைபெறவுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில், பழனியம்மாள் மறைந்திருப்பது ஓ.பி.எஸ். குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தைக் கொடுத்துள்ளது. ஓபிஎஸ் தாயாருக்கு மொத்தம் 9 குழந்தைகள். அதில் ஓ.பி.எஸ்.தான் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கால்களைப் பிடித்து குமுறல்


தாயார் மறைந்த தகவல் அறிந்து சென்னையிலிருந்து கிளம்பி வந்த ஓ.பன்னீர் செல்வம் தாயாரின் உடலைப் பார்த்து அப்படியே சமைந்து போய் நின்றார். நீண்ட நேரம் அவரைக் கும்பிட்டபடியே இருந்த அவர் தனது தாயாரின் கால்களைப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதார். மற்றவர்கள் அவரை அமைதிப்படுத்தி கையைப் பிடித்துத் தூக்கினர்.


டிடிவி தினகரன் இரங்கல்


பழனியம்மாள் மறைவுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவால் வாடும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது சகோதரர்  உள்ளிட்ட உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் தினகரன்.


சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்