சென்னை: ஆர்பி உதயகுமாருக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவர்கள் நடைபெற்ற சட்டமன்ற இடை தேர்தலில் கூட போட்டியிட முடியாமல் பய உணர்வோடு இருக்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பாக பேசி உள்ளார். அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சிக்காக உழைத்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். இதனால் ஓபிஎஸ் செங்கோட்டையுடன் ரகசிய பேச்சு வார்த்தையா என கூறப்படுகிறது.
அதிமுக இணைவது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்,
ஆர்பி உதயகுமாருக்கு நான் எந்த நேரத்திலும் பதில் சொல்லத் தேவையில்லை. அவர் என்ன பேசினாலும் பேசிட்டு போகட்டும். மக்கள் கவனித்துக் கொள்வார்கள். அவர் பேசக்கூடிய மொழிகள் எல்லாம் எந்த மாதிரியான மொழிகள் என உங்களுக்கே தெரியும். அப்புறம் எதற்கு நான் அவருக்கு பதில் சொல்ல வேண்டும். அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை கட்சிக்காக உழைத்தவர். கட்சிக்காக பல நிலைகளில் நானும் அவரும் இணைந்தே பணியாற்றியிருக்கிறோம்.
அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிகாக உழைக்கக்கூடிய ஒரு உன்னத தொண்டராக தான் இன்றும் இருக்கிறார். கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரும் கருத்தாக இருக்கவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் விசுவாசமான தொண்டர்கள் கட்சி இணை வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, ஆட்சியில் இருக்கும் போது ஏழை எளிய மக்களுக்கு செய்த நல திட்டங்கள், இவை எல்லாம் எண்ணி மீண்டும் கட்சி இணைந்தால் தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது என்பதை அவர்கள் எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வாக்குகளை பெற தவறி விட்டார்கள். உங்களுக்கு தெரியும்.
ஏழு தொகுதியிலும் டெபாசிட்டை இழந்து விட்டனர். 13 தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள். இதிலிருந்து மக்களுடைய ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை தெளிவாக தெரிகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுடைய உரிமையை மீட்கின்ற குழுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று புரட்சித் தலைவர் காலத்தில் இருந்து இன்று வரை இருக்கக்கூடிய அதிமுகவின் விசுவாச மிக்க தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். மக்களும் எங்கள் பக்கம் தான் எங்களுக்கு தான் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது.
அந்த தொகுதியில் யாரெல்லாம் எப்படி எல்லாம் என்னை தோற்கடிப்பதற்கு சதி சூழல் எல்லாம் உருவாக்கினார்கள் என்பது தெரியும். இவர்கள் எல்லாம் மீறி சுயேச்சை சின்னம் இரண்டாவது சின்னம் பதிவான பத்தரை இலட்சம் வாக்குகளில், அதில் மூன்று லட்சத்து 42 ஆயிரம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதிலிருந்து மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் நிரூபித்து இருக்கிறோம்.அவர்கள் தற்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வோடு இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
{{comments.comment}}