சென்னை: எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, நானும் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார் பற்ற நாடு. ஜாதி வேறுபாடு அற்ற இந்தியாவில் தமிழகம் உள்ளது. இதில் யாரையும் பிரித்துப் பார்ப்பது என்பது முடியாது. அனைவரும் ஒன்றாய் பணியாற்றும் நிலையில் அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
2026 இல் மீண்டும் இந்த இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவில், இரு மாபெரும் தலைவர்களுடன் ஆசியோடு அதிமுக 2026ல் அணையில் ஏறுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இருக்கின்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு வாரிசு வாரிசு என்று கூறி வருகின்றேன்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தியவுடன் நானும் திரைப்படங்களை பார்ப்பதில்லை. முழுமையாக நிறுத்திவிட்டேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றிருக்கிறார். அவர் பெருவாரியான தொழில்களை ஈர்த்துக்கொண்டு வருவார் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}