சென்னை: அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்தித்தாக ஊடகங்கள் எழுதுவது சரியில்லை. சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன்.. இதில் என்ன பயம், தயக்கம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் பல்வேறு அதிரடிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இதனால் மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படப் போவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மறுபக்கம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதேபோல சி.வி.சண்முகம், அமித்ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இடையில், அண்ணாமலையை மாற்றப் போவதாக மீண்டும் பரபரப்பு கிளம்பியது. 11ம் தேதிக்குப் பிறகு அண்ணாமலை மாற்றம் நிச்சயம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அவரும் தலைவர் பதவியெல்லாம் வெங்காயம் என்று பேசி வருகிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சீமான், ஏன் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் என்ற விவாதமும் கிளம்பியது. ஆனால் இந்த செய்திகளை சீமான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சந்தித்தால் சந்தித்தேன் என்று சொல்லப் போறேன். எனக்கென்ன பயமா.. தயக்கமா. சந்திச்சால் சந்திச்சேன் அப்படின்னு சொல்வேன். நீங்களாக சந்திச்சாரா என்று பேசுவது சரியில்லை. ரஜினிகாந்த் என்ன பாஜகவா. அன்பின் நிமித்தமாக அவரை சந்தித்தேன் பேசினேன். சந்தித்ததையும் நானே சொன்னேன். எனவே நீங்களாக கற்பனை செய்யாதீர்கள்.
தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவேன் அப்படின்னு ஏற்கனவே சொல்லிட்டேன். அப்படி இறுக்கும்போது கூட்டணி வைப்பதாக இருந்தால் நான் ஏன் வேட்பாளரை அறிவிக்கப் போறேன் என்று கேட்டுள்ளார் சீமான்.
ஏப்ரல் மாதம் கூலான கோடை காலமாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்..!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைவு!
அமைச்சர் கே.என் நேருவின்..மகன், தம்பி வீடுகளில்.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!
தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!
{{comments.comment}}