இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

Apr 15, 2025,06:02 PM IST

சென்னை: ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும்  சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.


வட இந்தியாவில் அயோத்தி அருகே நடக்கும் கதைக்களத்தில், கதைக்கு சிறிதும் தொடர்பின்றி யாழ்ப்பாணப் புலிப்படை என்று உள்நோக்கத்துடன் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் தவறானது போலவும், அதன் தளபதிகள் கொடூர வில்லன்கள் போலவும் கட்டமைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.




முழுக்க முழுக்க தமிழர்கள் மீதான இனவெறுப்பினாலேயே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதை  எளிதில் உணர முடிகிறது.  தாயகக்கனவுடன் சாவினைத் தழுவி, உலகத்தமிழர்களின் உள்ளத்தில் வைத்து வணங்கப்பெறுகின்ற எம்மாவீரத் தெய்வங்களை அவமதிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது.


ஆகவே, ஜாட் திரைப்படக் குழு, ஈழ விடுதலைப்போராட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும்  சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.


தமிழ்நாடு அரசு கடந்த காலங்களைப்போல மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜாட் திரைப்படத்தை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் பெரும் மக்கள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து திரையரங்குகளை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தும் எனவும் அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்