சென்னை: புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதில், புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள சமணர்களின் திருவிழாவான மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக்கடைகளையும், இறைச்சிக் கடைகளையும் மூட உத்தரவிடும் தமிழ்நாடு அரசு, அவர்களைவிடவும் பெரும்பான்மை சமயத்தினராக தமிழ்நாட்டில் வாழ்கின்ற கிறித்துவப் பெருமக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? அரசின் வருமானம் ஒருநாள் தடைபடுவதைத் தவிர, மதுக்கடைகளை மூடுவதால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? எல்லோருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசு, குறிப்பிட்ட மக்களின் சமய உணர்வுகளுக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் செயல்படுவது சிறிதும் அறமற்றச்செயலாகும். இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் ‘திராவிட மாடல்’ மதச்சார்பின்மையா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, திமுக அரசு கிறித்துவப் பெருமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென்றும், அதனை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அரசாணை வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!
போதும்.. விரதத்தை முடிச்சுக்கலாம்.. எல்லோரும் செருப்பு போட்டுங்கங்க.. அண்ணாமலை கோரிக்கை!
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் எனக்கே.. அன்புமணி சுட்டிக் காட்டுவது என்ன.. மாம்பழத்துக்கு ஆபத்து வருமா?
திருட்டு மாடல் அரசை துரத்துவோம்.. முதல் அறிக்கையிலேயே திராவிடத்தைத் தவிர்த்த நயினார் நாகேந்திரன்!
சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!
{{comments.comment}}