சென்னை: சாலையில் ஒன்று இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி வந்து மோதி செத்துப் போய்ருவ. சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி நெஞ்சு டயலாக். நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையிலிருந்து சிந்தித்து வந்தவன் என்று விஜய்க்கு எதிராக சீமான் கொந்தளித்து பேசியுள்ளது பலரையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்தார். அப்போதில் இருந்து விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார் சீமான். ஆனால் கடந்த 27ம் தேதி விஜய் மாநாடு நடத்தியதில் இருந்து விஜய்க்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபம் காட்டினார். அவரது பேச்சிலிருந்து:
என்னிடம் சரக்கு இருக்கு. கருத்து இருக்கு. நான் சத்தமாக தான் பேசுவேன் ப்ரோ. எங்கள் முன்னோர்கள் கூறியது உண்மையை பேசு, உரக்கப் பேசு, உறுதியாக பேசு, அதை இறுதிவரை பேசு. விடுதலை பெற்றவன் பேசுவதற்கும் அடிமை உரிமைக்கு பேசுவதற்கும் வேறுபாடு உண்டு ப்ரோ.
அது கொள்கை இல்லை. அழுகிய கூமுட்டை. ஒரு சாலையில் இடதுப்புறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும் நடுவில் நின்றால் லாரி வந்து மோதி விடும். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி நெஞ்சு டயலாக். நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல. கொடும் சிறையிலிருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டி கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன்.
நீங்கள் இனி தான் பெரியார் அம்பேத்கர் எல்லாம் பற்றி படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பிஹச்டியை வாங்கி விட்டோம். தீசிஸ் சமிட் பண்ணி விட்டோம். நீங்க சங்க இலக்கியத்தை இனிமேல் தான் எங்க இலக்கியம் என்று தேட வேண்டும். சங்க இலக்கியத்திலே வருகின்ற தலையலங்கானத்து பாண்டிய நெடுஞ்செழியனின் பேரனும் பேத்தியும் தானடா நாங்கள். இது கதையல்ல தம்பி இன வரலாறு.
திராவிடம் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ. எங்கள் இலட்சியத்திற்கு எதிராகப் பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026 ஆம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது.
இப்போது காட்டுக் கோழியும் நாட்டு கோழியும் ஒன்று என்று கூறுகிறார். இப்படி ஏன் உணர்கிறார் என்றால் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தில் வில்லனும் கதாநாயகனும் ஒருத்தரே நடித்ததால் இப்படி நினைத்து விட்டார். வேலுநாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. இது டிரைலர் தான் ப்ரோ. மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்போம் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால் வரும் என்றார் சீமான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
செம்பரம்பாக்கம்.. மணமக்களுக்கு பூண்டு மாலை போட்ட நண்பர்கள்.. இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு
தென் தமிழகத்திலும், மேற்கிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
அமரனுக்கு அடுத்தடுத்து குவியும் பாராட்டுக்கள்.. முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து.. ரஜினிகாந்த் பாராட்டு
லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.. மழைக்கு செமையா இருக்கும்.. சூடான கோவக்காய் புளி குழம்பு + சுடு சாதம்!
நடுரோட்டில் நின்னா லாரி அடிச்சு செத்துப் போய்ருவ.. 10 நாளில் என்னாச்சு சீமானுக்கு.. ஏன் இந்த ஆவேசம்?
இது பஞ்ச் டயலாக் இல்லை தம்பி.. நெஞ்சு டயலாக்.. விஜய்க்கு எதிராக கொந்தளித்த சீமான்!
Gold Rate: அக்டோபரில் உச்சம் தொட்ட தங்கம் நவம்பரில் சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?
நயன்தாரா பிறந்த நாள் ஸ்பெஷல்... நெட்பிளிக்ஸ் தரும் ஸ்வீட் சர்ப்பிரைஸ்.. ரசிகர்களே ரெடியா!
பஞ்ச் டயலாக்கோ நெஞ்சு டயலாக்கோ இல்லை..தானாக கூடிய கூட்டம்.. சீமானுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிலடி
{{comments.comment}}