சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாகவே தெருக்களில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. அதேபோல நாய்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கால்நடைகளின் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. சாலைகளில் கால்நடைகள் உலா வருவதாலும் குறுக்கே வருவதாலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதில் நாய்த் தொல்லைதான் கொடுமையாக உள்ளது. தெருவுக்கு பத்து நாய்கள் குறையாமல் உள்ளன. அந்த நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது, நடந்து செல்லும் பொது மக்களை அச்சுறுத்துவது, என பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சாலையில் செல்லும் வெறி நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வெறி நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை விடாமல் துரத்தி கடித்து குதறும் சம்பவமும் நிறைய நடக்கிறது.
அப்படித்தான் சென்னையில் கடந்த வருடம் சிறுமி ஒருவரை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தெருவில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குகின்ற கொடுந்துயர நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஆடுகள் மற்றும் இளம் மாடு கன்றுகளைத் தாக்கி உயிரிழப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய உழவர் பெருமக்களுக்குப் பெருத்த பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள கொங்குப் பகுதி மக்கள் மீள முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி, செய்வதறியாது தவித்து வருகின்றனர். காங்கேயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுவெளியில் சுற்றுத்திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளிடம் வேளாண் மக்கள் பலமுறை புகாரளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆகவே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கி கொல்கின்ற வெறிநாய்களை மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும், வெறிநாய்களால் கால்நடைகளைப் பறிகொடுத்து பெரும் நட்டத்திற்கு ஆளான வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய இழப்பீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
திரைத் துறையினர் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
How to impress your wife?.. மனைவியை மகிழ்விக்க என்ன செய்யலாம்.. கணவர்களே இங்க வாங்க!
"கெட்அவுட் வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் மோடி மட்டுமே!" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மட்டன் சுக்கா.. மதுரை ஸ்டைலில் ச்சும்மா சுர்ருன்னு ஏறும் டேஸ்ட்டுடன்.. வாங்க சமைக்கலாம்!
கை கொடுக்கும் இயற்கை மருத்துவம்.. அதன் மகத்துவம் மற்றும் சாராம்சங்கள்!
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்.. 3 நாட்கள் நடக்கப் போகும் சூரியக் கதிர் விழும் அற்புத நிகழ்வு!
வெறும் வெந்தயத்தை விடுங்க.. முளைகட்டியவெந்தயம் சாப்பிட்டுப் பார்த்திருக்கீங்களா?
சென்னை கோயம்பேடு சந்தை..இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா..?
{{comments.comment}}