சென்னை: பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுப்பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அதேபோல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செய்வதற்காகவும் ரயில் மற்றும் பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று திரள்வதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.அதே சமயத்தில் பேருந்து மற்றும் ரயிலில் முன் சேவைகளையும் செயல்படுத்தி வருகிறது.
இருப்பினும் இந்த காலகட்டத்தில் முன்பதிவு சேவைகளை பயன்படுத்துவதற்கு 60 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தும் விரைவில் பயண டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் பயணிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தது. அப்போது முன்பதிவு செய்யும் நாட்களை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் பயணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே பயணத்தை திட்டமிடுவதற்கு ஏதுவாக தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்குள் முன்பே முன்பதிவு செய்வதை 90 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்டம் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}