EB பில் கட்ட இனி அங்குமிங்கும் அலைந்து கஷ்டப்பட வேண்டாம்.. வாட்ஸ்ஆப்பிலேயே ஈஸியா கட்டிக்கலாம்!

May 18, 2024,11:23 AM IST

- பொன் லட்சுமி


சென்னை:  பொது மக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம்  மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது... அது  என்னவென்றால்  இனிமேல் பயனாளர்கள் ஈபி பில் கட்டுவதற்காக, வெயிலிலோ  மழையிலோ அலைந்து திரிந்து கஷ்டப்பட வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே வாட்ஸ்ஆப் மூலமாக மின் கட்டணத்தை ஈஸியாக செலுத்தலாம் என்ற செய்திதான் அது.


எங்கு பார்த்தாலும் UPI பேமென்ட்தான் இப்போது பிரபலமாக உள்ளது. காய்கறிக் கடைக்குப் போனாலும் சரி, பானி பூரி வாங்கி சாப்பிட்டாலும் சரி.. எதுவாக இருந்தாலும் யுபிஐ மூலமாக இஸியாக பே பண்ண முடிகிறது. அந்த வசதியை தற்போது மின் கட்டணத்திற்கும் கொண்டு விட்டார்கள். இதுதொடர்பாக டான்ஜெட்கோ சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது.




நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு இரண்டு  மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தான்   கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின்  தொழில்நுட்பம் வளர வளர இணையதளத்தின் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.. அதனைத் தொடர்ந்து  கூகுள் பே, போன் பே   போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியையும் அறிமுகம் செய்தது. இதனால் பொதுமக்கள் உரிய தேதியில் தவறாமல் பணத்தை செலுத்தும்  சிறந்த  வசதியாக  இது அமைந்தது.


இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலமாக  மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது 500 யூனிட்டுகளுக்கும் மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் வாட்ஸ்ஆப் யுபிஐ (UPI) மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரையிலும்  இரண்டு கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் தங்களின் மொபைல் போன் எண்ணை மின் வாரியத்திடம் பதிவு செய்துஉள்ளனர். அதன் மூலமாக மின் கட்டணம், மின்சார துண்டிப்பு தகவல்கள், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அந்த நுகர்வோர்களுக்கு  அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும்  நுகர்வோர்கள் தங்களது   வாட்ஸ்ஆப் வாயிலாகவே கட்டணம் செலுத்தலாம்..


94987 94987 இதுதான் பில் கட்டுவதற்கான வாட்ஸ் ஆப் எண். உங்களத்  மொபைல் போனில் இந்த எண்ணை நீங்கள் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் டான்ஜெட்கோவின் வாட்ஸ் ஆப் எண். உங்களது வாட்ஸ்ஆப்பில் இதைப் பார்க்கும்போது, அதில், 'வியூ, பே பில்' என்று இரண்டு  'லிங்க்'  ஆப்ஷன்  இருக்கும். அதில் வியூ பக்கத்தில் மின் பயன்பாடு, கட்டண விபரம்  ஆகியவை அடங்கி இருக்கும். பே பில் பக்கத்தில் கட்டணம் செலுத்தும் வசதி இருக்கும். அதை தேர்வு செய்து  தங்களின் வாட்ஸ்ஆப் யு.பி.ஐ., வாயிலாக கட்டணத்தை செலுத்தலாம்.


இந்த முறை மின் கட்டணத்தை செலுத்தி விட்டால் பரவாயில்லை. அடுத்த முறை மின் கட்டணத்தை செலுத்தும்போது இதை டிரை பண்ணிப் பாருங்க.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்