உச்சநீதிமன்றத்தின் கையில் பொன்முடியின் பதவி.. என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது?

Dec 21, 2023,07:13 PM IST

- சஹானா


சென்னை: அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார் பொன்முடி. காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு இன்று அளிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையால்.


கடந்த 2006 - 11ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். 2011ல் அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், பொன்முடிக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை 2011 செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. பொன்முடி மனைவி விசாலாட்சியும், வழக்கில் சேர்க்கப்பட்டார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கில் கூறப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., --- எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். 'அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. 




அவர்களுக்கான தண்டனை விபரங்களை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று அறிவித்தார். அதில், பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேல்முறையீடு செய்வதற்காக இந்த சிறை தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். 


அழுகை


தண்டனை குறித்த தீர்ப்பு அளித்ததும் பொன்முடியின் மனைவி விசாலாட்சி கண்ணீர் விட்டு அழுதார். மேலும், தண்டனையை குறைக்க வேண்டும் என விசாலாட்சி கோரிக்கை விடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு அவருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.


அடுத்து மூவ் என்ன?


பொதுவாக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிடுவார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே பதவியில் தொடர முடியும்.


தீர்ப்பில் 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தான் ஜாமின் பெற முடியும். இதற்காகவே இருவருக்கும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் தற்போதைக்கு அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்