முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள்.. கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

Oct 14, 2024,06:08 PM IST

சென்னை: கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு  அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.


தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று மத்திய அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் ஓமன் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இந்த நிலையில், தமிழகத்தில்  பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.சென்னை உள்ளிட்ட 9 வட மாவட்டங்களுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்திற்கு தடை, மண் சாலைகளில் பாதிப்பு, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு, மண் சரிவு ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையாக வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்