ஆஹா..  வட தமிழ்நாட்டுக்கு மழை வருதாம்ண்ணே.. சென்னைக்கும் "பார்ட்டி" உண்டாம்!

Sep 02, 2023,04:30 PM IST
சென்னை: வட தமிழ்நாட்டில் சூப்பரான மழை பெய்யக் காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

கேரளாவிலும், கேரளாவையொட்டியுள்ள தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளிலும் கன மழை பெ்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. தெற்கு, மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்துள்ளது.  இன்று முதல் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும்.

அடுத்த 2 வாரங்களுக்கு பருவ மழை நல்ல உச்சத்தில் இருக்கும். நாளையும், நாளை மறுநாளும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், திருப்பதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். குறிப்பாக இரவு நேர மழை சிறப்பாக இருக்கும்.  சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை இருக்கக் கூடும்.

பிற மாவட்டங்களில்  குறிப்பாக மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், சேலம், வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்