மணிக்கு 50 கி.மீ வேகம்தான்.. மொள்ளமாத்தான் போகும்.. "குரூர குழந்தை" கிம்மின் "மர்ம ரயில்"!

Sep 12, 2023,05:09 PM IST
பியாங்யாங்: வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உன் ரஷ்யா வந்துள்ளார். ஆயுதம் தாங்கிய அதி நவீன ரயிலில் அவர் ரஷ்யா வந்துள்ளார். ஆயுதப் பேரம் தொடர்பாகவே அவர் ரஷ்யா போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளில் கிம் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான் என்பது முக்கியமானது. மேலும் கொரோனா வந்த பிறகு அவர் வெளியில் எங்குமே போகாமல் இருந்து வந்தார். தனது நாட்டுக்குள் பரவிய கொரோனோவையும் "கொடூரமாக விரட்டியடித்தவர்" கிம் (அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன).



கிம் ரஷ்யாவுக்கு வந்துள்ள ரயில் குறித்துத்தான் இப்போது ஒரே பேச்சாக உள்ளது. தலைநகர் பியாங்யாங்குக்கம், கிம் வந்து இறங்கியுள்ள ரஷ்யாவின் விலாடிவாஸ்டாக் பகுதிக்கும் இடையிலான தொலைவு 1180 கிலோமீட்டராகும். இந்த தூரத்தை 20 மணி நேரம் பயணம் செய்து வந்து சேர்ந்துள்ளார் கிம்.  வட கொரியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே எல்லைகள் உள்ளன. இரண்டும் அண்டை நாடுகளாகும்.

கிம் பயணித்து வந்த ரயில் ஒரு ராணுவ கவச வாகனம் போல.  அதி வேகமாக போகக் கூடிய ரயில் அல்ல இது. நிதானமாக போகக் கூடியது. பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இதன் பெட்டிகள் இருக்கும். வட கொரியத் தலைவர்கள் எப்போதுமே வெளிநாடுகளுக்குப் போவதாக இருந்தால், அதாவது அண்டை நாடுகளுக்குப் போவதாக இருந்தால் ரயிலில்தான் போவார்கள். அதேபோலத்தான் கிம்மும் ரயிலிலேயே வந்துள்ளார்.



வழக்கமான ரயில்களை விட இந்த ரயில் மிகவும் மெதுவாக செல்ல இந்த ரயிலின் பெட்டிகள் எல்லாம் எடை அதிகமானவை. கவச வாகனம் என்பதால் குண்டு துளைக்காத புல்லட் புரூப் ரயில் இது. எனவேதான் மணிக்கு 50 கிலோமீட்டர் என்ற வேகத்தில்தான் இந்த ரயில் செல்லும். இந்த ரயிலில் 90 காரேஜ்கள் உள்ளன. ஒவ்வொரு காரேஜும் புல்லட் ப்ரூப் வசதியுடன் கூடியவை. 

இந்த ரயிலுக்குள் அனைத்து வசதிகளும் உள்ளன. ஹோட்டல் உள்ளது. அதில் அத்தனை வகை சாப்பாடுகளும் கிடை்கும்.  மாநாட்டுக் கூடங்கள், படுக்கை அறைகள் என சகல வசதிகளும் நிரம்பிய அதி நவீன ரயில் இது.  சாட்டிலைடன் போன் வசதி, டிவி வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளன.

இப்படி ரயிலில் போகும் பாரம்பரியத்தை தொடங்கி வைத்தவர் கிம்மின் தாத்தாவான கிம் இல் சுங்தான். அவர்தான் வியட்நாடம், கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ரயிலில் போவார். அதை அவரது மகன் கிம் ஜோங் இல் தொடர்ந்தார். இப்போது கிம் ஜோங் இல்லின் புதல்வரான சர்வாதிகாரி கிம் ஜோங் உன் தொடர்கிறார்.

விமான பயணத்தில் ஆபத்துககள் அதிகம் என்பதாலும், கொலை முயற்சிகள் நடைபெறலாம் என்பதாலும்தான் இவர்கள் பெரும்பாலும் விமானத்தில் போவதில்லை.  இப்படித்தான் கிம் கடந்த 2001ம் ஆண்டு ரயிலிலேயே மாஸ்கோ வரை வந்தார். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 10 நாட்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



இதேபோல முன்பு,  முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வியட்நாமுக்கும் ரயிலிலேயே வந்திருந்தார் கிம் ஜோங் உன். இதற்காக அவர் 4500 கிலோமீட்டர் ரயிலிலேயே பயணம் செய்து சீனா வழியாக வியட்நாம் வந்தார். இரண்டரை நாட்களானது இந்தப் பயணத்திற்கு என்பது நினைவிருக்கலாம்.

ரஷ்ய அதிபர் புடினுக்கும் கூட இதுபோல ஒரு சிறப்பு ரயில் உள்ளது. ஆனால் கிம் ஜோங் உன் ரயிலில் உள்ள வசதிகள் அளவுக்கு புடின் ரயிலில் இல்லை என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்