"அது போக மாட்டேங்குதே".. லேட்டாகும் வட கிழக்குப் பருவ மழை!

Oct 12, 2023,04:04 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வராமல் இருப்பதால் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகிறதாம்.


அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கு். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கமால் உள்ளது. இதற்கு  தென்மேற்கு மழை இன்னும் நிற்காமல் பெய்வது தான் காரணமாக கூறப்படுகிறது.




தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த மாதம்  15ம் தேதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கில் வீசத்தொங்கும் காற்று நின்ற பின்னர் வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கிய பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு வடகிழக்கு மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அது இருக்கட்டும்.. ஸ்கூலுக்கு லீவு விட்ற அளவுக்கு மழை பெய்யுமா இல்லையா.. அதைச் சொல்லுங்க என்று ஸ்கூல் குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஆர்வமாக காத்திருக்காங்க.. பார்க்கலாம்.. இந்தவாட்டி எத்தனை நாளுக்கு ஸ்கூல் லீவு கிடைக்குதுன்னு!

சமீபத்திய செய்திகள்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்