சென்னை: வட கிழக்குப் பருவ மழை அல்மோஸ்ட் முடியப் போகிறது.. அதுக்கு நன்றி சொல்லிட்டு போய் பொங்கலைக் கொண்டாடலாம் வாங்க என்று போஸ்ட் போட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
இன்று முதல் நாளை வரை தென் மாவட்டங்களில் மழை பெய்யலாம். அதன் பிறகு வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட முடிந்து விடும் என்றும் கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட தமிழ்நாட்டை உண்டு இல்லை என்று பண்ணி விட்டது. குறிப்பாக வட தமிழ்நாட்டையும், தென் தமிழ்நாட்டையும் வச்சு செய்து விட்டது. வடக்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்குப் பெரு வெள்ளத்தைக் கொண்டு வந்து விட்டது. அதேபோல நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியிலும் வெளுத்து வாங்கி பெரு வெள்ளத்தை ஏற்படுத்தி விட்டது.
இடையில் காவிரி டெல்டாப் பகுதிகளுக்கும் ஓரளவுக்கு மழையைக் கொடுத்தது. மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட நல்ல மழையைக் கொடுத்தது. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மழையைக் கொடுத்த வட கிழக்குப் பருவ மழை ஜனவரியிலும் கூட தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் ஜனவரியிலும் பருவ மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும், அனேகமாக வட கிழக்குப் பருவ மழை இத்தோடு முடிவுக்கு வரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ஸ்டைலில் ஜாலியாக டிவீட் போட்டுள்ளார். அதில், தென் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு வட கிழக்குப் பருவ மழை முடிவுக்கு வரும். மலைவாசஸ்தலங்களுக்கு விசிட் அடிக்க இப்போது சரியான டைம்.. நல்ல வின்டரை அனுபவிக்கலாம்!
அனைவரும் சேர்ந்து Annyeong !!! Kamsahamnida என்று சொல்லும் நேரம் வந்து விட்டது.. அனைவருக்கும் Haengbokada Pongal என்று கூறியுள்ளார்.
அது என்ன புரியாத பாஷை என்று நீங்க நினைப்பது புரியுது பாஸ். இது கொரிய பாஷையாம்.. கொரிய பாஷையில், ஆன்னியோங் என்றால் ஹலோ அல்லது ஹாய் என்று அர்த்தம்.. கம்சாஹம்னிடா என்றால் நன்றி என்று அர்த்தம்.. அதாவது வட கிழக்கு பருவ மழைக்கு நன்றி சொல்றோம்... "ஹாயன்பொக்கோடா பொங்கல்" என்றால் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் என்று அர்த்தம்
ஓகே.. மிஸ்டர் வெதர்மேன்.. இந்த சீசன் முழுக்க நீங்க கொடுத்த ஒவ்வொரு அப்டேட்டும் "daebak...daebak".. உங்களுக்கும் ஹேப்பி பொங்கல்!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}