தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. 2 நாட்களுக்கு சென்னைக்கு ரெட் அலர்ட்!

Oct 15, 2024,07:02 PM IST

சென்னை:   இன்று தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மாலை இரவு நேரங்களில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:




நேற்று காலை தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5:30 மணி அளவில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெறக்கூடும். 


அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.


இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


இன்று அதிக கன மழை முதல் மிக கனமழை: 


திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 


கனமழை முதல் மிக கனமழை: 


திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.


கனமழை: 


கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை அதிக கன மழை முதல் மிக கனமழை: 


திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை மழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


கனமழை முதல் மிக கனமழை: 


திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மறுநாள் ( 17.10. 2024) கன முதல் மிக கனமழை:


ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகா- கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்