நெருங்குது புரட்டாசி.. மீன், கறிக் கடைகளில் முண்டியடித்த மக்கள் கூட்டம்!

Sep 10, 2023,11:25 AM IST
சென்னை: புரட்டாசி மாதம் நெருங்கி வருவதால் அசைவ உணவு உண்போர் கறிக் கடைகள், மீன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

அசைவ உணவு உண்போரில் பெரும்பாலானாவர்கள் பூஜை புணஸ்காரங்கள், மத நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள்,விரதங்கள்  போன்றவற்றிலும் தீவிர கவனம் செலுத்துபவர்கள்தான். எனவே முக்கிய நாட்களில் அவர்கள் அசைவத்தை தவிர்ப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானவர்கள் சுத்த சைவர்களாக மாறி விடுவது வழக்கமானதுதான்.



அந்த புரட்டாசி மாதம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்குகிறது. இதனால் அசைவப் பிரியர்கள், அடுத்த ஒரு மாதத்துக்கு அசைவம் சாப்பிட முடியாதே.. இப்பவே முடிந்தவரை கட்டு கட்டு என்று கட்டி விடலாம் என்று அசைவக் கடைகளில் அலை மோதுகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க மட்டன், சிக்கன் வாங்கவும், மீன் வாங்கவும் இன்று கூட்டம் கடுமையாக அலை மோதியது. வழக்கமாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே கூட்டம் காணப்பட்டது. விலையும் கூட சற்று உயர்ந்தே காணப்பட்டது. மதுரையிலும் கூட கரிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் ஜே ஜே என்று அலை மோதியதைக் காண முடிந்தது.



மட்டன், சிக்கன் விலை அதிகமாக இருப்பதால் பலரும் மீன் பக்கம் தாவி விடுவது அவ்வப்போது நடப்பதுதான். அந்த வகையில் இன்றும் கூட மீன் கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.  அடுத்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிட வழியில்லை. காரணம், அடுத்த நாள் புரட்டாசி பிறப்பதாலும், விநாயகர் சதுர்த்தி வருவதாலும் பெரும்பாலானவர்கள் தவிர்ப்பார்கள். எனவேதான் இன்றே கூட்டம் அலை மோதுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

news

தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம்.... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்வு!

news

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி.. தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை..!

news

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை கூடுகிறது.. தமிழக அமைச்சரவை கூட்டம்..!

news

அமெரிக்க வருமான வரியில் மாற்றம் : டிரம்ப்பின் புதிய நடவடிக்கையால் மக்கள் கலக்கம்

news

ஏன் தேவை மாநில சுயாட்சிக் குழு..? முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து கடிதம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்