மார்ச் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லையா? .. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி தகவல்!

Mar 25, 2025,05:38 PM IST

திருநள்ளாறு:   வரும் மார்ச் 29ம் தேதி சனிப்பெர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இருந்து ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்து செல்வது வழக்கமான ஒன்று தான். இருந்தாலும் கிரகங்களின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜோதிட ரீதியாக கிரகப் பெயர்ச்சி என்பது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  கிரகங்களிலேயே அனைவரையும் நடுங்க வைக்கும் கிரகம் என்றால் அது சனி கிரகம் தான்.




ஜோதிட ரீதியாக சனி பகவானை மந்தகாரகன் என்று அழைக்கிறார்கள். மெதுவாக நகரமும் கிரகமான சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். "சனியை போல் கொடுப்பவரும் இல்லை; கெடுப்பவரும் இல்லை", "குரு கொடுப்பதை சனி தடுப்பார்; சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" ஆகியன சனியின் ஆற்றலை சொல்வதற்காக ஜோதிடர்கள் கூறும் மொழியாகும். சனி பகவான் எந்த அளவிற்கு கெடு பலன்களை தருகிறாரோ, அதை விட பல மடங்கு அதிகமான நன்மைகளையும் வழங்கக் கூடியவர். 


தற்போது கும்ப ராசியில் இருந்து வரும் சனி பகவான், வரும் மார்ச் 29ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக சனிப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அனுபவிக்க போகும் சாதக பாதகங்கள் பற்றிய பலன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதே போல் சனிப் பெயர்ச்சியில் பாதிப்பை சந்திக்க போகும் ராசிகள் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்ற தகவல்களும் சமூக வளைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 


இதற்கிடையில் சனிப் பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் பல சனி பகவான் சிறப்புக்குரிய தலங்களில் நடைபெற்று வருகிறது. ஆனால் சனி பகவானுக்குரிய முக்கிய பரிகார தலமாக விளங்கும் திருநள்ளாறில் எந்த ஏற்பாடும் நடைபெறவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது, மார்ச் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி கிடையாது. வாக்கிய கணித பஞ்சாங்கத்தின் படி, 2025ம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி என்பது கிடையாது. 2026ம் ஆண்டில் தான் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதனால் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றி மற்ற கோவில்களில் மார்ச் 29ம் தேதி நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. அதே சமயம் திருநள்ளாறில் 2026ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்