காசு, டீ எதுவும் தர மாட்டேன்...பிடிச்சா ஓட்டு போடுங்க...ஓப்பனாக பேசி ஓட்டு கேட்ட கட்காரி

Oct 01, 2023,10:10 AM IST
மும்பை : வரும் லோக்சபா தேர்தலில் தான் யாருக்கும் பணமோ, வேறு எந்த பொருளும் தரப் போவதில்லை என்றும், நான் மக்களுக்காக சேவை ஆற்றி உள்ளேன். அவர்கள் விரும்பினால் ஓட்டு போடட்டும் என ஓப்பனாக சொல்லி இப்போதே தனது தேர்தல் பிரசாரத்தை ஜோராக துவக்கி விட்டார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்காரி, மகாராஷ்டிராவின் வாஸிம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மிகவும் யதார்த்தமாகவும், ஓப்பனாகவும் மக்களிடம் பேசிய வார்த்தை தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய கட்காரி, அடுத்த லோக்சபா தேர்தலில் பேனரோ, போஸ்வரோ எதையும் நான் ஓட்டக் கூடாது என முடிவு செய்து விட்டேன். யாருக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கவோ, பிரச்சாரத்தின் போது டீ வாங்கிக் கொடுக்கவோ போவது இல்லை.  மகாலட்சுமியை கண்ணில் காட்ட போவதில்லை. வெளிநாட்டு சரக்கு வாங்கி கொடுக்க போவதில்லை. நான் இதுவரை எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை. உங்களுக்காக சேவை செய்துள்ளேன்.




எனக்காக நான் எந்த விளம்பரமும் செய்து கொள்ள போவதில்லை. என்னை பற்றியும், எனது பணிகள் பற்றியும், நான் என்ன செய்கிறேன் என்பது பற்றியம் உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் எனக்கு ஓட்டு போடுங்கள். அப்படி விருப்பம் இல்லையா? எனக்கு ஓட்டு போட வேண்டாம் என தெரிவித்துள்ளார் கட்காரி. 

நிதின் கட்காரி, மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி., ஆகி, மத்திய அமைச்சர் ஆனவர். இந்த முறையும் அவர் நாக்பூர் தொகுதியிலேயே போட்டியிடலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. 

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பற்றி இதுவரை எதிர்கட்சிகள் தான் தீவிரமாக பேசி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வியூகம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தலைமை அது பற்றி பெரிதாக அளட்டிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதுவும் மத்திய அமைச்சரவையில் உள்ள உறுப்பினர்கள் யாரும் தேர்தல் பற்றி இதுவரை பேசாமல் இருந்த நிலையில் தற்போது முதல் ஆளாக தேர்தல் பற்றி பேசி, தனக்காக அசத்தலாக ஓட்டுக் கேட்டு பிரச்சாரத்தையும் துவக்கி வைத்துள்ளார் கட்காரி. இது மக்கள் மத்தியில் பெரியதாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்