தங்கம் விலை.. அப்பாடா.. இன்று எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் வெள்ளி விலை சற்று உயர்வு!

Jul 01, 2024,01:08 PM IST

சென்னை: தங்கம்  விலை கடந்த சனிக்கிழமை அன்று உயர்ந்திருந்த  இன்று எந்த மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.


சமீபகாலமாகவே ஏற்ற இறக்கங்கள் அதிகளனில் இருந்து வந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை கிராமிற்கு ரூ.19 அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ.152 உயர்ந்திருந்தது. நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் நகை விலை வழக்கம் போல எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் வந்தக நாளான இன்று நகை விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. 




இந்த விலை நிலவரம் வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை திடீர் என்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. 


இன்றைய தங்கம் விலை நிலவரம்...


சென்னையில் கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,685 ரூபாயாக இருந்தது.இது எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,480 ரூபாயாக உள்ளது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,293 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,344 ஆக உள்ளது. 


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.66,850 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,68,500க்கு விற்கப்படுகிறது.


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.72,930 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,29,300க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


தங்கம் விலை மாற்றம் இன்றி இருந்து வரும் வேலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை  0.20 காசுகள் அதிகரித்து ரூ.94.70க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 757.60 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.947 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,470 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,700க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்