நடிகர் நிவின் பாலியின்.. தனித்துவமான நடிப்பின் மூலம்.. கவனத்தை ஈர்த்த.. வருஷங்களுக்கு சேஷம்!

Apr 13, 2024,04:20 PM IST
சென்னை: வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகர் நிவின்பாலி. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உச்சத்திற்கு உயர்த்தி உள்ளதாம்.

இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான வர்ஷங்களுக்கு சேஷம் படம் ஏப்ரல் பதினோராம் தேதி வெளியானது. இப்படத்தில் நிவின் பாலி, பிரணவ் மோகன்லால், மற்றும் தியான் சீனிவாசன், ஆகியோர் நடித்துள்ளனர். இந்திய திரையுலகில் பல திறமையான நட்சத்திரங்கள் தனது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பங்களிப்பால் இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நிவின் பாலி யின் தனித்துவமான நடிப்பு அனைத்து ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. இப்படத்தில் அவரது திரை தோற்றம், அவர் ஆற்றல் மிக்க நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.



இப்படத்தின் இரண்டாம் பாதியில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவும், சிறந்த நடிகராகவும் தனது கதாபாத்திரத்தை சிரமமின்றி ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு அதை வெளிப்படுத்தி உணவுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் அவர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அவரது பயணத்துடன் இணைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனையை உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது வர்ஷங்களுக்கு சேஷம் படம்.

தமிழ் ரசிகர்களின் மையமாக திகழ்வது கோடம்பாக்கம். பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும் தோல்விகளையும், கண்டது இந்த கோடம்பாக்கம் தான். தமிழ் சினிமாவின் இந்த கோடம்பாக்கம் நகரம்  இப்படத்தின் கதைகள பின்னணியாம். இப்படம் 70 மற்றும் 80களில் சினிமா துறையில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை 
பற்றியதாம்.

இந்த நிலையில் நிவின் பாலியின் அட்டகாசமான நடிப்பும், வலிமையான கதைக்களம், திறமையான சக நட்சத்திர பட்டாளங்கள், மற்றும்  தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது வருஷங்களுக்கு சேஷம் படம். இப்படம் மூலம் இவர்கள் ஹைடெக்கான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளார்கள். மேலும் இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களிடையே நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்துமாம்.

சமீபத்திய செய்திகள்

news

அமர்நாத் யாத்திரைக்கான.. முன்பதிவு தொடங்கியது.. 533 வங்கிக் கிளைகளில் சிறப்பு ஏற்பாடு

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

news

கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

news

பழம்பெரும் கோவில்கள்.. வீரத்தின் விளை நிலம்.. கலைகளின் தாயகம்.. நம் தாய்த் திரு தமிழ் நிலம் (2)

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

அனுமதி இல்லாமல் பாட்டை பயன்படுத்திய.. அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்