பாட்னா: பீகார் மாநில ஆளுநரை இன்று முற்பகல் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த நிதீஷ் குமார் இன்று மாலை மீண்டும் அதே ஆளுநரால் முதல்வராகப் பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டார்.
இன்று முற்பகல் வரை ராஷ்டிரிய ஜனதாதளத்தின் ஆதரவுடன் முதல்வராக இருந்து வந்த நிதீஷ் குமார், மாலையிலிருந்து பாஜக ஆதரவு முதல்வராக புது அவதாரம் பூண்டுள்ளார். மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவிப்பிரமான விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவருடன் 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்டார்.
கடந்த 23 ஆண்டு கால முதல்வர் வரலாற்றில் 4 முறை கூட்டணி மாறியுள்ளார் நிதீஷ் குமார். இப்போது 9வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. இந்தநிலையில் இந்தக் கூட்டணியை முறிக்க நிதீஷ்குமார் முடிவெடுத்தார். இந்தக் கூட்டணியை கைகழுவி விட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அவர் தீர்மானித்தார்.
நிதீஷ் குமாருக்கு ஒரு காலத்தில் மிக மிக நல்ல பெயர் இருந்தது. நேர்மையாளர், தெளிவானவர், ஊழலுக்கு எதிரானவர் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவரது அடுத்தடுத்து அரசியல் பல்டிகள் அவரது பெயரை இப்போது வெகுவாக கெடுத்து விட்டதாக கருதப்படுகிறது.
ஆளுநரை சந்தித்து ராஜினாமா
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பல்டி அடித்தார் நிதீஷ் குமார். ராஷ்டிரிய ஜனதாதளத்துடனான கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று காலை இறுதியாக ஆலோசனை நடத்திய பின்னர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நிதீஷ் குமார் சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை நிதீஷ் குமார் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலையே மீண்டும் நிதீஷ் குமார் பாஜக ஆதரவுடன் மறுபடியும் ஆட்சியமைத்துள்ளார். மீண்டும் மீண்டும் அணி மாறி வரும் நிதீஷ் குமாருக்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. பச்சோந்திக்கே டப் கொடுக்கிறார் நிதீஷ்குமார் என்று காங்கிரஸ் கடுமையாக வசை பாடியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளம், நிதீஷ் குமாரை, குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்கே போய் விட்டது என்று ஆவேசமாக வர்ணித்துள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் போட்டியிடுவது தொடர்பான தொகுதிப் பங்கீட்டையும் கூட பாஜகவுடன், நிதீஷ் குமார் பேசி முடித்து விட்டதாகவும் சொல்கிறார்கள். நிதீஷ் குமார் நேரடியாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மட்டுமே பேசி அனைத்தையும் முடிவு செய்ததாக சொல்கிறார்கள்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}