2036ல்.. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா.. நீதா அம்பானி வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்!

Jul 28, 2024,01:29 PM IST

பாரீஸ்: பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அங்கு இந்தியா ஹவுஸ்  திறக்கப்பட்டுள்ளது. அப்போது இந்தியாவில் 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்து வருகிறோம் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா அம்பானி கூறியுள்ளார். இதனால் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்தியாவில் காமென்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ன. அதேபோல கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் உலகக் கோப்பைக் கால்பந்து மற்றும் ஒலிம்பிக் போட்டிகள்தான் இன்னும் கனவாகவே உள்ளன. இந்த இரு சர்வதேச போட்டிகளும் இதுவரை இந்தியா பக்கமே வந்ததில்லை.


இந்தியாவில் கால்பந்துப் போட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. ஆனாலும் கூட உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைதான் இன்னும் உள்ளது. அதேபோல ஒலிம்பிக் போட்டியும் இதுவரை இந்தியாவில் நடைபெற முடியாமல் உள்ளது.




இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில், இந்தியா ஹவுஸ் தொடங்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவன உதவியுடன் இது தொடங்கப்பட்டுள்ளது. இதை நீதா அம்பானி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


அப்போது நீதா அம்பானி கூறுகையில், 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக்ஸை நடத்த தீவிரமாக முயற்சித்து வருகிறோம். ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. 


இந்தியா ஹவுஸில் இந்தியாவின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், இசை, நடனம், இந்திய உணவுகள், பாலிவுட் இசை, தொழில்நுட்பம் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கம். சர்வதேச நாடுகளின் வீரர், வீராங்கனைகளின் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை அறிய இது உதவும் என்றார் நீதா அம்பானி.


இந்தியாவில் நடந்த முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரை ரிலையன்ஸ் நிறுவனம்தான் ஸ்பான்சர் செய்து நடத்தியது. முகேஷ் அம்பானியின் தந்தை  திருபாய் அம்பானிதான் அதை நடத்தி சர்வதேச நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பது நினைவிருக்கலாம். அதன் பின்னர்தான் இந்தியாவிலும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியும் என்று சர்வதேச நாடுகள் கருதின. இதையடுத்துதான் பல்வேறு சர்வதேச போட்டிகள் இந்தியாவை நோக்கி வந்தன என்பதும் முக்கியமானது.


நீதா அம்பானி வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்