இது இன்னொரு '96'.. பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் .. "நினைவெல்லாம் நீயடா"

Feb 27, 2024,12:02 PM IST

சென்னை: இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின், மனிஷா யாதவ், சினாமிகா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படமான நினைவெல்லாம் நீயடா திரையுலகின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டுள்ளது.


லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு ‘நினைவெல்லாம் நீயடா' படத்தை தயாரித்துள்ளார். இமையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்த 1417வது படம் என்கிற பெருமையுடன், அழகான காதல் காவியமாக வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் நினைவெல்லாம் நீயடா. பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ளார். மனீஷா யாதவ், யுவலட்சுமி மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்க  இன்னொரு நாயகனாக ரோஹித் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா,  இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 


பள்ளிக்கால நினைவுகளை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று விடுவதில்லை.. ஆனால் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தை ரசிகர்களின் மனதை தொடும் விதமாக சரியான கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிராஜன். இந்தநிலையில் சமீபத்தில் இப்படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குநர் கதிர், நடிகர் சம்பத்ராம் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டுகளித்தனர். படம் பார்த்த பலரும் இப்படத்தில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பதாக பாராட்டியுள்ளனர்.




இயக்குநர் கதிர் கூறும்போது,  ரொம்ப நாளைக்கு பிறகு ரசித்து பார்த்த படம். பள்ளிக்கூட காட்சிகள் ரசிக்கும் விதமாக இருக்கின்றன என்று பாராட்டினார். நடிகர் சம்பத்ராம் கூறுகையில், 90களின் மாணவர்கள் காலகட்டத்தை நம் கண் முன் நிறுத்தி உள்ளார்கள். 96 படம் போலவே இன்னொரு விதமாக இந்தப்படம் நம்மை கவர்கிறது என்று கூறி சிலாகித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்