"அவருக்கு வயசாய்ருச்சு.. மனநலமும் சரியில்லை.. நமக்குத் தேவையா ".. டிரம்ப்பை காலி செய்த நிக்கி ஹாலி!

Jan 21, 2024,12:43 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரக் கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண் தலைவரான நிக்கி ஹாலி, போட்டியில் முன்னணியில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.


குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான டிரம்ப் களத்தில் குதித்துள்ளார். அவரே தற்போது முன்னணியிலும் உள்ளார். பலரது ஆதரவும் அவருக்கே கிடைத்து வருகிறது. இந்தப் போட்டியில் விறுவிறுப்பாக முன்னேறி வந்த விவேக் ராமசாமி தனக்கு போதிய ஆதரவு கிடைக்காததால் போட்டியிலிருந்து விலகி டிரம்ப்புக்கு ஆதரவாக மாறி விட்டார்.


இருப்பினும் இப்போட்டியில் இன்னொரு இந்திய வம்சாவளி அமெரிக்கரான நிக்கி ஹாலி தொடர்கிறார். அவர் டிரம்ப்புக்கு எதிரான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தி வருகிறார். டிரம்ப் அதிபராக இருந்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக செயல்பட்டவர் ஹாலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டிரம்ப்புக்கு  எதிரான போட்டியில் அவர் முனைப்பு காட்டி வருகிறார்.




டிரம்ப் குறித்து ஹாலி கூறுகையில், டொனால்ட் டிரம்ப்புக்கு மன நலம் சரியில்லை. வயதும் ஆகி விட்டது. அவரால் அதிபர் பதவியில் மீண்டும் செயல்படுவது பொருத்தமாக இருக்காது. 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவத்திற்குக் காரணமானவர் அவர். அவரை அமெரிக்கர்களால் மன்னிக்கவே முடியாது. 


கேபிடல் கலவரத்தை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார் டிரம்ப். என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். கேபிடல் கலவரத்தின்போது நான் அங்கேயே இல்லையே.. பிறகெப்படி என்னால் அதை சமாளிக்க முடியும்.. நான் சமாளிக்க வேண்டும் என்று அதிபராக இருந்த அவர் எப்படி எதிர்பார்க்கலாம்.


80 வயதுகளில் இருக்கும் ஒருவர் நமக்கு அதிபராக வேண்டுமா. ஏற்கனவே ஒரு அதிபர் இருக்கிறார். அவர் தடுமாறிக் கொண்டுள்ளார்.  இன்னும் ஒரு வயதான அதிபர் நமக்குத் தேவைதானா.  உலகமே பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இந்த வயதானவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றார் ஹாலி.


இதற்கிடையே, டொனால்ட் டிரம்ப் தரப்பிலிருந்து நிக்கி ஹாலிக்கு ஒரு ஆபர் போயுள்ளது. அதாவது துணை அதிபர் பதவியை தருவதாக டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆபரை நிக்கி ஹாலி நிராகரித்து விட்டாராம்.  ஒரு வேளை டிரம்ப்பின் டீமில் நிக்கி ஹாலி இணைந்தால், துணை அதிபரானால், அந்தப் பதவிக்கு வந்த 2வது இந்திய அமெரிக்க வம்சாவளி துணை அதிபர், 2வது இந்திய அமெரிக்க வம்சாவளி பெண் துணை அதிபர் என்ற பல பெருமைகளை அவர் அடைய நேரிடும். ஆனால் அந்த வாய்ப்பை ஹாலி நிராகரித்து விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்