விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி.. பெட்ரோல் பிடிக்க ஓடிய மக்கள்.. தீயில் சிக்கி 147 பேர் பரிதாப மரணம்

Oct 17, 2024,09:20 AM IST

நைஜர்: நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதில் இருந்த பெட்ரோலைப் பிடிக்க அலைபாய்ந்த மக்கள் தீயில் சிக்கி பரிதாபமாக 147 பேர் பலியான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


வடக்கு நைஜீரியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  பொருளாதார நெருக்கடியிலும், வறுமை, ஏழ்மையிலும் சிக்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றுதான் நைஜீரியா. உணவுக்கும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கும் பஞ்சம் நிலவுகிறது. இதனால் இதுபோல விபத்தில் ஏதாவது லாரி, கண்டெய்னர் என எது சிக்கினாலும் அதில் உள்ள பொருட்களை எடுக்க உயிரைப் பணயம் வைத்து மக்கள் குவியும் அவலம் தொடர் கதையாக உள்ளது.


நைஜீரியாவில் எரிபொருட்களுக்கு மிகப் பெரிய பஞ்சம் உள்ளது. பெட்ரோல், டீசல் என எல்லாமே அங்கு தங்கத்தை விட காஸ்ட்லியான பொருட்களாக உள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் விபத்தில் சிக்கினால் அதைப் பிடிக்க மக்கள் நூற்றுக்கணக்கில் குவிகிறார்கள்.




அப்படித்தான் இந்த விபத்தும் நடந்துள்ளது. ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியா என்ற நகரில் ஒரு பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். டேங்கரிலிருந்து கொட்டிய பெட்ரோலை கையில் கொண்டு வந்த கேன்கள், பாத்திரங்களில் பிடிக்க முண்டியடித்தனர். அப்போது திடீரென டேங்கர் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. இதில் பெட்ரோல் பிடிக்க கூடியிருந்த மக்கள் சிக்கிக் கொண்டனர். மொத்தமாக 147 பேர் உயிருடன் கருகிப் பிணமானதாக தகவல்கள் கூறுகின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மீட்கப்பட்டனர். 94 உடல்களை போலீஸார் மீட்டனர். மற்ற உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய் விட்டன.


இந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடுமையான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நைஜீரியா நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


நைஜீரியா துணை அதிபர் காசிம் ஷெட்டிமா இதுகுறித்து விடுத்த அறிக்கையில் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


ஆனால் நைஜீரியாவில் இதுபோல எரிபொருள் டேங்கர்கள் விபத்தில் சிக்குவதும், வெடித்துச் சிதறுவதும் தொடர்க தையாக உள்ளது. காரணம், இந்த டேங்கர்கள் எதுவுமே சரிவர பராமரிக்கப்படுவதில்லை. லாரிகளும் கூட பராமரிக்கப்படுவதில்லை. அதற்கு அவர்களிடம் பணமும் இல்லை. இதனால்தான் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெட்ரோல், டீசல் மீதான மானியங்களை அதிபர் போலா அகமது இனுபுடு கடந்த வருடம் நீக்கியதைத் தொடர்ந்து இவற்றின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.


இந்த கொடுமையோடு கடந்த வாரம்தான் எரிபொருட்களின் விலையை அந்த நாட்டு எண்ணெய் நிறுவனம் உயர்த்தியது. இதனால் மேலும் சுமை கூடியது.


கடந்த 2020ம் ஆண்டு மட்டும் இதுபோல 1531 விபத்துக்கள் நடந்து, அதில் 535 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் நைஜர் மாகாணத்தில் நடந்த பெட்ரோல் டேங்கர் விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர். 2023ம் ஆண்டு மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் 6500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்