திருச்சி: வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு நிதி வருவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. பல்வேறு கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இந்த நிலையில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டவற்றின் ரெய்டுகளும் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளன.
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. யாருடனும் அது சேருவதில்லை. அதை பாஜக பி டீம் என்றுதான் திமுக தொடர்ந்து கூறி வருகிறது. திமுக வாக்குகளைப் பிரிக்கவே நாம் தமிழர் கட்சியை பயன்படுத்துவதாகவும் கூட திமுகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் ஏற்கனவே அறிவித்து விட்டார். 40 தொகுதிகளில் 20 பெண்கள், 20 ஆண்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய பொழுந்து நாம் தமிழர் கட்சிக்கு சோதனைப் பொழுதாக அமைந்து விட்டது. அதாவது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
கோவையில் 2 இடங்களிலும், சென்னை, திருச்சி, சிவகங்கை, மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடந்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர் திருச்சி சண்முகாநகர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சாட்டை துரைமுருகன் என்ற பெயரில் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் மூலமாக நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சண்முகா நகரில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர்.
வீட்டில் துரைமுருகன் இல்லை. அவரது மனைவி மாதரசியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சாட்டை துரைமுருகனை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றனர் அதிகாரிகள்.
நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு நிதி வருகிறது.. தனிப்பட்ட முறையில் சாட்டை முருகனுக்கு எவ்வளவு பணம் வருகிறது.. எந்த நாடுகளில் இருந்து பணம் வருகிறது.. யார் மூலமாக பணம் கிடைக்கிறது.. என்பது பற்றிய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் 2 இடங்களில் சோதனை நடந்த சோதனையில், ஒன்று காளப்பட்டி முருகன் வீட்டில் நடந்தது. இவரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான். சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் நடந்த சோதனையில் ஒரு செல்போன் 7 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல நாம் தமிழர் கட்சியின் இன்னொரு முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தியையும், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது ஊரில் இல்லாததால், 5ம் தேதி விசாரணைக்கு வருவதாக கார்த்தி பதில் கொடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் இன்று நடந்த அதிரடி சோதனை தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}