சிவகாசியில் இரவில் உலுக்கிய ஆணவக் கொலை.. மாப்பிள்ளையை வெட்டிக் கொன்ற பெண்ணின் அண்ணன்!

Jul 25, 2024,10:59 AM IST

சிவகாசி:  சிவகாசியில் தங்களது சகோதரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருடைய மகன் கார்த்திக் பாண்டி. 26 வயதான இவர் சிவகாசியில்  மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். சிவகாசி வம்பிழுத்தான் மூக்குப்பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில்  பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்  இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. இவர்கள் காதலிக்கும் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கவே, இரு விட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.




இதனைத் தொடர்ந்து கார்த்திக் பாண்டி நந்தினியை  கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அய்யம்பட்டியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார்.  நந்தினி சிவகாசி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். வேலை முடித்து வீடு திரும்ப உள்ள நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் அங்கு வந்தார்.


அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர் கார்த்திகை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இதில் கார்த்திக் கீழே விழுந்து, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதனை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நந்தினியின் சகோதரர் பாலமுருகன், நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


இதனையடுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்