ஆமா, மணகோலத்தில் இதுவரை யாரும் வந்து ஓட்டு போடலை பார்த்தீங்களா.. ஏன் தெரியுமா?

Apr 19, 2024,04:07 PM IST

சென்னை:  மணக்கோலத்தில் வந்து ஓட்டுப் போட்ட மணமக்கள்.. மாலையும் கழுத்துமாக வந்து ஓட்டுப் போட்ட புது மாப்பிள்ளை.. மணக்கோலம் கலையாத நிலையில் வாக்களித்த மணப்பெண்.. என்றெல்லாம் வழக்கமாக செய்தி வரும்..  ஆனால் இன்று நடைபெறும் தேர்தலின்போது அப்படி ஒரு செய்தியும் வரவில்லை.. ஏன் தெரியுமா.. காரணம் இருக்குங்க!


பொதுவாகவே வளைகாப்பு, கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும் நாளில் அரசு தேர்வுகள் வருவது வழக்கம். அந்த நேரத்தில் திருமணமோ வளைகாப்பையோ அதை முடித்த கையோடு தேர்வு எழுதுவதற்கு ஓடி வருவார்கள்.. தாலி கட்டிய கையோடு மாலையும் கழுத்துமாக பலரும் வருவதைப் பார்த்திருப்போம்.. இதுகுறித்த செய்திகள் ஏகப்பட்டது அந்த சமயத்தில் வரும். 




பரவாயில்லையே திருமணத்தை முடித்த கையோடு கடமையாக வந்து விட்டார்களே என்று பலர் பாராட்டுவர்.. சிலரோ, ஏன் அந்த டிரஸ்ஸை மாற்றி விட்டு வந்திருக்கலாமே என்று கிண்டலாக கேட்பதும் உண்டு. ஆனால் இன்றைய தேர்தலின்போது அப்படியெல்லாம் எதுவும் நடந்தது போல தெரியவில்லை. இதற்குக் காரணம் தற்போது நடந்து வருவது சித்திரை மாதம் என்பதாலோ என்னவோ. சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தமாட்டார்கள். எனவேதான் இன்று நடந்த வாக்குப் பதிவின்போது மாலையும் கழுத்துமாக யாரும் ஓட்டுப் போட வரவில்லையா என்று தெரியவில்லை. 


ஆனால் வட இந்தியாவில், சில ஜோடிகள் கல்யாணம் முடித்த கையோடு வந்து வாக்களித்த சுவாரஸ்யம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அப்படி ஒரு ஜோடி வந்து ஓட்டுப் போட்டுள்ளது. உதம்பூரைச் சேர்ந்த ராதிகா சர்மாவுக்கு நேற்று திருமணம் நடந்தது.  இன்று மணக்கோலத்திலேயே தனது கணவருடன் வந்து அவர் வாக்களித்து விட்டுச் சென்றார்.


வழக்கமாக சித்திரை மாதத்தில் திருமணம், காது குத்து, வளைகாப்பு என பெரும்பாலும் வைக்க மாட்டார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இந்த மாதத்திலும் அதைச் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ மணக்கோலத்தில் வந்த மாப்பிள்ளை பொண்ணு சுவாரஸ்யச் செய்தி இந்த வாட்டி மிஸ் ஆகி விட்டது.. மக்களுக்கு ஏமாற்றம்ப்பா!

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்