ஆக்லாந்து: நியூசிலாந்தில் கடைகளில் கைப்பை உள்ளிட்டவற்றை திருடியதாக சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி. கோல்ரிஸ் கஹர்ரமன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர் இவர். அகதியாக வந்து எம்.பி. பதவியை வகித்த முதல் நபர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
நியூசிலாந்தின் கிரீன் கட்சியில் முக்கியப் பிரமுகரும் கூட. இவர் மீதான திருட்டுப் புகார் விசாரணையில் இருந்து வரும் நிலையில் தனது எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். 42 வயதான கோல்ரிஸ், 2017ம் ஆண்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மீது 3 திருட்டுப் புகார்கள் வந்துள்ளன. ஆக்லாந்திலும், வெல்லிங்டனிலும் கடைகளில் திருடியதாக இவர் மீது புகார் வந்துள்ளது. மொத்தம் 3 தருணங்களில் இவர் திருடியதாக கூறப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராப் பதிவுகளை வைத்து போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். ஆக்லாந்தில் உள்ள பொட்டிக்கில் புகுந்து ஒரு அழகிய கைப்பையை திருடி விட்டார் கோல்ரிஸ் என்பது ஒரு புகார்.
தான் திருடியதை கோல்ரிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். அதேசமயம் அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார். வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் இவ்வாறு செய்து விட்டேன். இது தவறுதான். இதற்காக அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனது செயல் மிகத் தவறானது என்பதை நான் அறிவேன். அதீத பதட்டம் மற்றும் மன அழுத்தம், உளைச்சல் காரணமாகவே இவ்வாறு நடந்துள்ளேன் என்று கூறியுள்ளார் கோல்ரிஸ்.
ஈரானைச் சேர்ந்தவர் கோல்ரிஸ், சிறு வயதிலேயே அகதியாக நியூசிலாந்துக்கு வந்து விட்டார். அவரை இன ரீதியாக, பாலியல் ரீதியாக பலரும் இழிவுபடுத்தியுள்ளனர், அவமதித்துள்ளனர். தனது பாதுகாப்புக்கு மிரட்டல் இருப்பதாகவும் அவர் பலமுறை கூறி வேதனைப்பட்டுள்ளார். எல்லாவற்றையும் தாண்டித்தான் அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்.பியும் ஆனார்.
எல்லாமும் சேர்ந்துதான் அவரை பெரும் மன அழுத்தத்திற்குக் கொண்டு போய் விட்டதாக கிரீன் கட்சி தலைவர் ஜேம்ஸ் ஷா கூறியுள்ளார். அவரது இந்த நிலைக்கு அவரை அவமதித்தவர்களும்தான் முக்கியக் காரணம் என்று ஜேம்ஸ் ஷா தெரிவித்துள்ளார்.
கோல்ரிஸின் ராஜினாமா குறித்து கிரீன் கட்சியின் துணைத் தலைவர் மராமா டேவிட்சன் கூறுகையில் பதவியை ராஜினாமா செய்ய கோல்ரிஸுக்கு உரிமை உள்ளது. இருப்பினும் அவரது உடல் நலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு பெண்ணாக அவர் சந்தித்து வரும் பிரச்சினைகள் மிக மோசமானவை. இன ரீதியாக, மொழி ரீதியாக, உடல் ரீதியாக அவரை பலரும் இழிவுபடுத்துவதை இன்னும் விடவில்லை. அவருக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் அனைவரும் துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
சென்னையில்.. இரண்டே முக்கால் மணி நேரம் விஜய்யுடன் தீவிர ஆலோசனை நடத்திய.. பிரஷாந்த் கிஷோர்!
டெல்லி முதல்வராக மீண்டும் ஒரு பெண்.. பாஜகவின் திட்டம் இதுதான்.. பதவியேற்பு விழா எப்போது?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில்.. நாளை தொடங்கி.. 3 நாட்கள் விறுவிறு ஜல்லிக்கட்டு!
பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்
ரேஸ் டீம் பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜீத் குமார்.. அஜீத்தே அஜீத்தே.. கொண்டாடும் ரசிகர்கள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி.. சென்னையில் விரைவில் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
சொத்தைப் பிரித்துத் தராத தொழிலதிபர் தாத்தா.. 73 தடவை கத்தியால் குத்திய கொடூர பேரன்!
ஈரோடு கிழக்குத் தொகுதி..எம்எல்ஏவாக பதவியேற்றார் விசி சந்திரகுமார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
{{comments.comment}}