ஆக்லாந்து: உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு 2024 பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 4. 30 மணிக்கு நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் புத்தாண்டு வந்து விட்டது.
புத்தாண்டையொட்டி ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் பகுதியில் மிகப் பெரிய அளவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும், கேக் வெட்டியும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆக்லாந்து நகரில்தான் உலகிலேயே முதல் முறையாக புத்தாண்டு பிறக்கிறது என்பதால் அந்த நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. ஆக்லாந்து முழுவதும் கோலகலமான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. புத்தாண்டின்போது இங்கு விதம் விதமான முறையில் பட்டாசுகள் வெடிக்கப்படும். அது உலகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டாசுகளை வெடிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு. ஆறு மாதமாகவே இதற்கு திட்டமிடுவார்கள். கிட்டத்தட்ட 500 கிலோ அளவிலான பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த வான வேடிக்கை பார்க்கவே படு ஜோராக இருக்கும்.
நியூசிலாந்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது. அந்த நாட்டின் சிட்னி நகரில் பல ஆயிரம் பேர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர். சிட்னி ஓபரா பகுதியில் கூடியிருந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று பட்டாசுகள் வெடித்தும், ஆடிப் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}