மதியுகமும், வரவு-செலவில் தெளிவும், தயாள குணமும், பரந்த மனப்பான்மையும், நீதியை தவறாமல், தனக்கென இருக்கும் கொள்கைகளில் இருந்து மாறாமல் இருக்கக் கூடிய துலாம் ராசிக்காரர்களே... உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ம் ஆண்டு ஏறுமுகமான சூழலை ஏற்படுத்த போகிறது. அதிகப்படியான சுப செலவுகள் இந்த ஆண்டிலே ஏற்பட போகிறது. செலவு என்றதும் பயப்பட வேண்டாம். நீங்கள் 10 செலவு செய்தால் 100 ஆக கிடைக்கும் சூழல் ஏற்படும்.
சுப காரியம் அரங்கேறும்
இந்த ஆண்டில் உங்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடைபெற உள்ளது. 3,6 க்கு அதிபதியான குரு பகவான் 7ம் பாவத்தில் இருக்கிறார். திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். திருமணமாகி கருத்து வேறுபாட்டில் இருப்பவர்கள் கூட மீண்டும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு, ஒன்று சேர்வதற்கான வாய்ப்புள்ளது.
துலாம் ராசிக்குரிய அதிபதியான சுக்கிர பகவானின் கிரக பெயர்ச்சி இந்த ஆண்டு அதீதமாக உள்ளது. அதனால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கும். 2ம் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய் பகவானால் ஐடி துறை, பண பரிமாற்றத்துறை, வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள்,அரசு பணியில் இருப்பவர்கள், மாத பணி செய்பவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், வீடு கட்டுமான தொழில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல பல நன்மைகள் இந்த ஆண்டில் கிடைக்கும்.
யோக பலன்கள் கூடி வரும்
7ம் பாவத்தில் இருக்கக் கூடிய குரு பகவான் இந்த ஆண்டில் மே மாதம் 01ம் தேதியில் இருந்து 8 ம் பாவத்திற்கு செல்கிறார். இதனால் நன்மைகள் அதிகமாகவே கிடைக்கும். 6 க்கு உரிய அதிபதி 8 ல் மறைவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அக்டோபர் மாதத்தில் இருந்த முழுவதுமாக குரு பகவான் வக்கிரத்தில் செல்கிறார். அந்த சமயத்தில் அதிகமான யோக பலன்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. 12ம் இடத்து அதிபதியான புதன் பகவான் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் வக்கிர கதி அடைவதும் உங்களுக்கு ராஜயோகத்தை தரும்.
கடந்த 4 ஆண்டுகளாக உங்களை புரட்டி எடுத்த சனி பகவான், தற்போது 5ம் பாவத்தில் இருக்கிறார். இவர் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள் வக்கிர கதியில் செல்கிறார். இந்த சமயத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாடகை சுமையில் இருப்பவர்களுக்கு வாடகை சுமை குறையும். அல்லது சொந்த வீடு வாங்கி செல்லும் நிலை ஏற்படும். கடன் சுமைகுறையும்.
துர்கை வழிபாடு நலம் தரும்
2024ம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் துர்கை அன்னையை வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி, அரளி மலர் மற்றும் எலுமிச்சம் பழம் மாலை வாங்கி சாற்றுங்கள். கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் ராகு கால நேரத்தில் 5 நிமிடம் ஒதுக்கி, கண்களை மூடி துர்கை அன்னையை தியானம் செய்யுங்கள். அம்மனுக்குரிய ஓம்சக்தி மந்திரத்தை சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை 108, 1008 முறை என ஜபம் செய்வதால் துர்கை அன்னையின் அருள் முழுவதுமாக கிடைக்கும். அபிராமி அந்தாதி படிக்கலாம்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}