தைரியம், துணிச்சல், தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும் ஆண்டாக இருக்க போகிறது. தன்னம்பிக்கை, தன்னுடைய திறமைகளை நன்கு அறிந்து வைத்து, சாதிக்கும் திறன் படைத்த நீங்கள் இந்த ஆண்டில் சிந்தித்து செயல் பட்டால் நன்மைகளை அதிகம் பெறலாம். எதிலும் சோம்பல் இல்லாமல் செயல்படுவது நல்லது.
மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். எல்லாம் தெரியும் எண்ணமும், அலட்சிய போக்கும் சிக்கல்களை உருவாக்கி விடும். எதிர்பாராத இடமாற்றம், பொறுப்பு மாற்றங்கள் வந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் விவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்க துவங்கும். விலகி இருந்த உறவுகள் தேடி வரும். யாரிடமும் வீண் பகை வேண்டாம். பொறுமையாக இருந்தால் சுபகாரியங்கள் கைகூடும். வாரிசுகளால் பெருமை கிடைக்கும். வாழ்க்கை துணையின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் உங்களின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்ட வேண்டும். வியாபாரிகள் புதிய முறைகளை கற்றுக் கொள்வீர்கள். ஒரே நேரத்தில் பல தொழில்களை துவங்க வேண்டும் என்ற ஆசை உண்டாகும். எதிலும் பொறுமை அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு மரியாதை கூடும். உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் இடம்மாறி செல்வார்கள்.
கலைஞர்களுக்கு திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். சிற்ப துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு வெளியூர் பயணங்கள் நல்ல மாற்றத்தை கொடுக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்குள். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். மறதியால் காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.
அரசு மற்றும் அரசியல் துறை சார்ந்தவர்கள் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. தவறான சகவாசங்களை விட்டு விலகி இருப்பது நல்லது. தொலைதூர பயணங்களை தேவையான முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்வது நல்லது. ஜீரண உறுப்பு, நரம்பு, அல்சர் பிரச்சனைகள் தலை தூக்கலாம். கவனம் அவசியம்.
வழிபாடு : துர்க்கை வழிபடுவதால் வெற்றிகளும், நன்மைகளும் கிடைக்கும். சனிக்கிழமையில் ஐயப்ப சாமியை வழிபடுவதால் பிரச்சனைகளில் சிக்காமல் இருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}