எதிலும் சிந்தித்து செயல்படும் தன்மை கொண்ட மீன ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டில் எதிலும் அமைதியாக செயல்பட்டு முன்னேற்றத்தை பெற வேண்டும். எதிலும் அவசரமோ, அலட்சியமோ காட்ட கூடாது. அலுவலகத்தில் சமூகமான சூழலே இருக்கும். அதை உங்களின் செயல்களால் கெடுத்துக் கொள்ளாமல் பார்த்து நடந்து கொள்ளுங்கள். எதிர்பாராத இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது.
குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வேகத்தை காட்டிலும் விவேகம் மிக முக்கியம். பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வான நிலை ஏற்படும். நண்பர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். யாரிடமும் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் நடைபடலாம். எல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த பணியையும் நேரடி கவனிப்புடன், உரிய நேரத்தில் செய்து முடியுங்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். ஆனால் சொல்லிலும் செயலிலும் நிதானமாக இருப்பது அவசியம். சகோதர வழி உறவுகளுடன் வீண் சர்ச்சைகள் வேண்டாம். பத்திரங்களை பத்திரமாக கையாள வேண்டும்.
சொத்துக்கள் வாங்குவது, விற்பதில் கவனம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருடைய தவறான வழிகாட்டுதலுக்கு கண்மூடித்தனமாக தலையசைத்து விடாதீர்கள். புதிய நபர்களை வீட்டிற்குள் சேர்ப்பது நல்லதல்ல. அக்க பக்கத்தினரிடம் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள். தொழிலில் முயற்சிக்கு ஏற்ற வளர்ச்சி கிடைக்கும்.
பெண்களுக்கு உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் வந்து சரியாகும். புதுவிதமான ஆசைகள் தோன்றும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
அரசுத்துறையில் இருப்பவர்கள் கவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத இடமாற்றம் வரலாம். அரசியல்வாதிகள் நிதானமாக இருப்பதும், பிறருக்கு ஜாமீன் கையெழுத்து இடுவதையும் தவிர்க்க வேண்டும். கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பெருமை பெறுவார்கள். வாகன பழுதுகளை உடனடியாக சரிசெய்து விடுவீர்கள். ஒற்றை தலைவலி, தூக்கமின்மை, அல்சர் பிரச்சனைகள் வரலாம். உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம் : விநாயகப் பெருமானையும், ராகவேந்திர சுவாமியையும் வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறி, நன்மைகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}