விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியை வசமாக்கும் மகர ராசிக்காரர்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் என அனைத்தும் கலந்த வருடமாக இருக்கும். நல்ல விஷயங்கள் தேடி வரும் சமயத்தில் தேவையற்ற பேச்சுக்களால் வாய்ப்புகளை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் பல காலமாக கண்ட கனவுகள் நனவாகலாம். இடமாற்றம். பதவி உயர்வு ஆகியவை விருப்பம் போல் ஈடேறும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பழைய விரோதத்தை மனதில் வைத்து யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.
சட்டங்களை மதித்து நடப்பது நல்லது. கோப்புகளை கையாளும் போதும், பயணத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தைகளால் பெருமை சேரும். குடும்பத்திலும் மற்றவர்களிடமும் மகிழ்ச்சி நிலைத்திருக்க குதர்க்கமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வீடு, வாகனங்களை புதுப்பிக்க யோகம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.
நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணத்தை கையாள்வதில் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழிலில் சாதகமான நிலை இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். தம்பதிகள் புரிதலை வளர்த்துக் கொள்வது நன்மை. கடந்த ஆண்டை விட நல்ல பலன்களையே இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். கடன் விஷயங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு சீரான வளர்ச்சி இருக்கும். யாரை பற்றியும் குறை கூறாமல் இருப்பது உங்கள் மீதான மகிழ்ச்சியை அதிகரிக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். பொது இடங்களில் நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.
கலைதுறையினருக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மாணவர்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தில் அதிக வேகத்தை தவிர்ப்பது நல்லது. நரம்பு, ஒற்றை தலைவலி, கழுத்து பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : பெருமாளையும், தாயாரையம் சேர்த்து வழிபடுவதால் பெருமைகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!
Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
{{comments.comment}}