Happy new year 2025.. புது வருடத்திற்கு எப்படி வாழ்த்துக்கள் அனுப்பலாம்?.. இந்தா பிடிங்க டிப்ஸ்!

Dec 30, 2024,06:10 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


2024 ஆம் ஆண்டின் நிறைவில் இருக்கிறோம். புது வருடம் 2025 ஐ நாம் எதிர்நோக்கிக் காத்து கொண்டு இருக்கிறோம்.  2024ம் ஆண்டு நம் அனைவரின் வாழ்விலும் நல்லவை மட்டுமல்லாது நல்ல அனுபவங்கள், நல்லவை அல்லாத அனுபவங்கள், நல்ல எண்ணங்கள், நல்லவை அல்லாத எண்ணங்கள் என எத்தனையோ கொடுத்துள்ளது.


வழக்கமாக எந்த பண்டிகை, கொண்டாட்டம் என்றாலும் யாரோ தயாரித்து, வடிவமைத்த படங்கள், எழுதிய வாசகங்கள் அடங்கிய போட்டோக்களை கூகுளில் டவுண்லோடு செய்து, அவற்றை அப்படி வாட்ஸ்ஆப்பில் ஃபார்வர்டு செய்து விட்டு, அவரவர் தங்களின் வேலைகளை பார்க்க சென்று விடுவதை தான் அநேகமானவர்கள் செய்கிறார்கள். உண்மையாகவே உணர்ந்து, மனதார வாழ்த்தை பகிரும் பழக்கம் என்பது அடியோடு காணாமல் போய் விட்டது. 




வரவிருக்கும் புத்தாண்டான 2025 ல் நம் நண்பர்களுக்கும், உறுவினர்களுக்கும் அருகில் இருப்பவர், தொலை தூரத்தில் இருப்போருக்கு, சிறியவர், பெரியவர், தம்பதியர், தங்களின் மகன், மகளுக்கு, உடல் பிறந்தோருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். வாழ்த்துக்களை எப்படி எல்லாம் பகிர்ந்து பிறரை மகிழ்விக்கவும், ஊக்குவிக்கவும், புத்தாண்டு வாழ்த்துக்களை பயன்படுத்தி, அர்த்தமுள்ள வாழ்த்தாக அனுப்பலாம் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.


1. கடந்து வந்த 2024 ம் ஆண்டிற்கு மனமார்ந்த நன்றியை கூறி புது ஆண்டு 2025 ஐ உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம். இனிய புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்கள்.




2. இறைவன் அருளால் 2025 ம் ஆண்டு நம் எல்லோர் வாழ்விலும் உடல்நலம், நீண்ட ஆயுள், நிறைவான செல்வம், உயர்ந்த புகழ், மெய் ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம்.




3. 2025 புத்தாண்டில் நல்ல முயற்சிகளும் நல்ல உறுதி மொழிகளும் நம் வாழ்க்கை கனவுகளும் நிறைவேறும் ஆண்டாக அமையட்டும். 




4. 2025 இந்த புத்தாண்டு உங்களுக்கு மன அமைதி, மன மகிழ்ச்சி, மன நிறைவு, மன உறுதி தந்து, மேலோங்கி வாழ இனி புத்தாண்டு வாழ்த்துக்கள். 




5. ஜனவரி 01 சிறப்புடன் பிறந்தது... சிந்தனையில் தெளிவும்...மனதில் ஒளியும்...எண்ணங்களில் உறுதியும் வாழ்வில் புத்துணர்ச்சியும் பெற்று வாழ்க வளமுடன். இனி புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகம் உயர்ந்து நிற்க முடியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

news

Khel Ratna Awards 2025.. டி. குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

news

உட்கட்சிப் பிரச்சினை சரியாகி விட்டது.. இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் தான்.. டாக்டர் ராமதாஸ்

news

கலைஞர்களின் நிஜமான நினைவிடம் என்பது மண்ணில் இல்லை.. மனசில்.. கவிஞர் வைரமுத்து

news

அரசுப் பள்ளிகளில் தனியார்: அண்ணாமலை அறிக்கை.. அன்பில் மகேஷ் மறுப்பு.. தனியார் பள்ளிகளின் விளக்கம்!

news

தடையை மீறி போராட்டத்தில் குதித்த.. சௌமியா அன்புமணி உட்பட பாமக நிர்வாகிகள்.. கூண்டோடு கைது

news

Tirupati.. 2024ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த.. 2.25 கோடி பக்தர்கள்!

news

ஊட்டியே சென்னையில் இறங்கியது போல்.. ஜில் ஜில் மலர்கள்.. ஜிகுபுகு ரயில்.. தொடங்கியது flower show!

news

மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அதிகம் பார்க்கும் செய்திகள்